விராட் கோலி உலகதர வீரர்.. அவருக்கு பௌலிங் பண்றது பெருமையான விஷயம்.. ரஷித் கான் பரவசம்
துபாய் : விராட் கோலி போன்ற உலகதரமான வீரருக்கு பௌலிங் போடுவது மிகவும் பெருமையான விஷயம் என்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் லெக்ஸ்பின்னர் ரஷித்கான் தெரிவித்துள்ளார்.
துபாயில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையில் நாளை போட்டி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை சேர்ந்த ரஷித் கான் கோலி போன்ற வீரருக்கு பௌலிங் போடுவதால் நம்முடைய திறமை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடர் நேற்று துவங்கியுள்ள நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையில் நாளை முதல் போட்டி துவங்கவுள்ளது. துபாயில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கென இரு அணிகளும் ஜரூராக தயாராகி வருகின்றன. இந்நிலையில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்தின் லெக் ஸ்பின்னர் ரஷித் கான், கோலி போன்ற உலகதர வீரருக்கு பௌலிங் செய்வது சிறப்பானது என்று தெரிவித்துள்ளார்.
அத்தகைய வலிமையான வீரருக்கு பௌலிங் செய்வதன்மூலம் நம்முடைய திறமை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் வழக்கமாக போட்டி முடிவதற்கு 4 ஓவர்கள் இருக்கும்போது தான் களமிறங்கி சிறப்பான பேட்டிங்கை செய்வதாகவும் அவர் கூறினார். ஆனால் தான் பேட்டிங் குறித்து அதிகமாக மெனக்கெடுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தான் மேலும் திறமையுடன் விளையாட விரும்புவதாகவும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications