
2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடரில் எட்டு அணிகள் மோதும் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற ஏழு அணிகளுடன் இரண்டு முறை மோதும். ஒவ்வொரு வெற்றிக்கும் இரண்டு புள்ளிகள் கிடைக்கும். புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் செல்லும்.

சிஎஸ்கே நிலை
சிஎஸ்கே அணி தான் ஆடிய ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது. முதல் போட்டியில் வென்ற அந்த அணி அடுத்த மூன்று போட்டிகளில் சரியான வீரர்கள் இல்லாமல், அணியை தேர்வு செய்யாமல், திட்டம் இல்லாமல் தோல்விகளை சந்தித்தது. ஐந்தாவது போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

ஐந்து அணிகள் மேலே
புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே அணி ஆறாம் இடத்தில் 4 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணிக்கு மேலே நான்கு போட்டிகளில் 4 புள்ளிகள் பெற்ற அணிகள் முதல் 6 புள்ளிகள் பெற்ற அணிகள் வரை ஐந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

டெல்லி - பெங்களூர்
மும்பை ஐந்து போட்டிகளில் 6 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருந்தாலும், டெல்லி, பெங்களூர் அணிகள் நான்கு போட்டிகளிலேயே 6 புள்ளிகள் பெற்று அடுத்த இரண்டு இடங்களில் உள்ளன. இந்த அணிகள் மிகவும் வலுவாக உள்ளன. புள்ளிப் பட்டியலில் எப்படியும் முதல் நான்கு இடங்களுக்குள் இடம் பெறும்.

சிஎஸ்கேவுக்கு கீழே..
ஆறாம் இடத்தில் சிஎஸ்கே அணி உள்ளது. அந்த அணிக்கு கீழே ஹைதராபாத் ஐந்து போட்டிகளில் 4 புள்ளிகளுடனும் மற்றும் பஞ்சாப் ஐந்து போட்டிகளில் 2 புள்ளிகளுடனும் உள்ளன. இந்த இரண்டு அணிகளிலும் பல பிரச்சனைகள் உள்ளன. பஞ்சாப் மீண்டு வருவது சந்தேகம் தான்.

எத்தனை போட்டிகளில் வெல்ல வேண்டும்?
சிஎஸ்கே அணி மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளுடனான மீதமுள்ள போட்டிகளில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். அத்துடன் மீதமுள்ள ஒன்பது லீக் போட்டிகளில் குறைந்தது ஆறு போட்டிகளில் வென்று 16 புள்ளிகள் பெறும் பட்சத்தில் பிளே-ஆஃப் வாய்ப்பு நிச்சயம் ஆகும்.

எப்படி மாறும்?
இனி வரும் போட்டிகளில் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை சிஎஸ்கே அணி உற்று நோக்க வேண்டும். குறிப்பாக புள்ளிப் பட்டியலில் தனக்கு மேலே இருக்கும் அணிகளை நிச்சயம் வீழ்த்த முயல வேண்டும். அப்போது சிஎஸ்கே அணி பட்டியலில் வேகமாக முன்னேறும்.

தோனியால் மட்டுமே முடியும்
தோனி கடந்த சீசன்களில் கவனமாக திட்டமிட்டு சிஎஸ்கே அணியை பிளே-ஆஃப் செல்ல வைத்திருக்கிறார். இந்த சீசனில் சிஎஸ்கே அணி தாமதமாக விழித்தாலும் தோனி கடந்த சீசன்களைப் போல திட்டமிட்டால் நிச்சயம் பிளே-ஆஃப் செல்லும்.


Click it and Unblock the Notifications