Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாட்டா.. தோனியையும் கூட்டிக்கிட்டு கிளம்புறோம்.. மற்ற ஐபிஎல் அணிகளை அதிர வைத்த சிஎஸ்கே!

சென்னை : 2020 ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க உள்ளதாக ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் கூறி உள்ளார்.

Recommended Video

முன்கூட்டியே UAE செல்ல திட்டம்.. IPL -க்கு தயாராகும் CSK

இந்த நிலையில், ஐபிஎல் அணிகள் அதற்கு முன் பயிற்சி செய்து தயார் நிலையில் இருப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

அந்த அணிகளை எல்லாம் முந்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடி திட்டத்தை வகுத்து, தோனியுடன் முன்பே ஐக்கிய அரபு அமீரகம் கிளம்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் துவங்க இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. ஐபிஎல் நடக்குமா? என்ற கேள்வி நீடித்து வந்தது. பிசிசிஐ எப்படியாவது 2020 ஐபிஎல் தொடரை நடத்தி விட முயற்சி செய்தது.

தாமதம்

தாமதம்

2020 டி20 உலகக்கோப்பை நடக்க வாய்ப்பு இல்லை என்பதை அறிந்த பிசிசிஐ அந்த நாட்களில் ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டது. எனினும், ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரை தள்ளி வைக்கும் முடிவை அறிவிக்காமல் தாமதம் செய்தது.

ஐபிஎல் தேதிகள்

ஐபிஎல் தேதிகள்

சில நாட்கள் முன்பு டி20 உலகக்கோப்பை தொடரை தள்ளி வைத்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகளில் இறங்கியது பிசிசிஐ. முதற்கட்டமாக செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரையிலான காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

அவசர கதியில் ஏற்பாடுகள்

அவசர கதியில் ஏற்பாடுகள்

இன்னும் ஒன்றரை மாத காலமே உள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் ஆட உள்ள வீரர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை அந்தந்த ஐபிஎல் அணிகளே திட்டமிட்டு வருகின்றன. அவசர கதியில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

ஐபிஎல் அணிகள் திட்டம்

ஐபிஎல் அணிகள் திட்டம்

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்ல விமான சேவைகள் கிடைக்குமா? என்ற சந்தேகம் நிலவுகிறது. தனியார் விமானம் மூலமாவது வீரர்களை ஐக்கிய அரபு அமீரகம் அழைத்துச் செல்ல ஐபிஎல் அணிகள் முடிவு செய்துள்ளன. அகஸ்ட் 20 அன்று ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் வகையில் பிசிசிஐ ஏற்பாடுகளை செய்து வருகிறது.

சிஎஸ்கே முடிவு

சிஎஸ்கே முடிவு

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கூடுதல் பயிற்சி செய்ய முடிவு செய்து இருப்பதாகவும், மற்ற அணிகளுக்கு முன்னரே ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளதாகவும், பயிற்சிகளை துவக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தோனியும் செல்கிறார்

தோனியும் செல்கிறார்

தோனி உட்பட அனைத்து வீரர்களையும் அழைத்துச் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆகஸ்ட் இரண்டாவது வாரத்திலேயே தோனியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐக்கிய அரபு அமீரகம் கிளம்ப உள்ளதாகவும் தெரிகிறது. இதன் மூலம், மற்ற அணிகளைக் காட்டிலும் கூடுதல் ப[பயிற்சி பெற உள்ளது சிஎஸ்கே அணி.

சாதகம்

சாதகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடுகளங்கள், சென்னை ஆடுகளத்தை போலவே சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். அதனால், இந்த ஐபிஎல் தொடர் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக இருக்கும் என கருதப்படும் நிலையில், கூடுதல் பயிற்சியையும் பெற உள்ளது அந்த அணி.

தோனி ரசிகர்கள்

தோனி ரசிகர்கள்

2020 ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நாள் முதல் தோனி ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து வருகிறார்கள். தற்போது அவர் விரைவில் பயிற்சியை துவக்க உள்ள தகவல் அவர்களை மேலும் உற்சாகம் அடையச் செய்துள்ளது.

Story first published: Saturday, July 25, 2020, 16:20 [IST]
Other articles published on Jul 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+