For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னாது கோலி சிங்கமா? அப்ப தோனி யாரு தெரியுமா? ஆர்சிபியை பங்கம் பண்ணி அனுப்பிய சிஎஸ்கே அட்மின்!

சென்னை : ஐபிஎல் திருவிழா களைகட்டத் துவங்கி விட்டது என்பதை ஐபிஎல் அணிகள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வதை வைத்தும் தெரிந்து கொள்ளலாம்.

ஆம், வழக்கம் போல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை செமயாக கிண்டல் அடித்து 2020 ஐபிஎல்-ஐ களைகட்ட வைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

சிஎஸ்கே-வின் ட்விட்டர் அட்மின் வெளியிடும் பதிவுகள் ரசிகர்களின் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றவை.

விடைபெற்றார் தல தோனி.. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு.. ஷாக்கிங் அறிவிப்பு!

சரியான பதிலடி

சரியான பதிலடி

இந்த முறையும் அவர் பெங்களூர் அணியின் ட்வீட் ஒன்றிற்கு சரியாக கிண்டல் செய்துள்ளது சிஎஸ்கே. அந்த அணியின் அட்மின் வெளியிட்டுள்ள பதில் சிரிப்பை வரவழைத்துள்ளது. பெங்களூர் அணி ரசிகர்கள் கூட அதற்கு திருப்பி பதில் அளிக்கவில்லை.

ஐபிஎல்

ஐபிஎல்

2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக பல மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டு, ஒருவழியாக வரும் செப்டம்பர் 19 அன்று துவங்க உள்ளது. ஐபிஎல் அணிகள் அதற்காக தங்களை தயார்படுத்தி வருகின்றன. இத்தனை காலம் கிரிக்கெட்டை விட்டு விலகி இருந்த ஐபிஎல் ரசிகர்களை ஈர்க்கும் பணிகளில் ஐபிஎல் அணிகள் இறங்கி உள்ளன.

பெங்களூர் அணி

பெங்களூர் அணி

ஏற்கனவே, சீசனுக்கு சீசன் மரண அடி வாங்கி, தொடர் தோல்விகளால் துவண்டு இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தங்கள் ரசிகர்களை ஈர்க்க சமூக வலைதளங்களில் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. அப்படித் தான் ஒரு பதிவை வெளியிட்டது

வித்தியாசம் என்ன?

வித்தியாசம் என்ன?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி புகைப்படத்தையும், அருகே சிங்கம் ஒன்றின் புகைப்படத்தையும் வெளியிட்டு, "இரண்டு படத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன.. எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை." என கேட்டு இருந்தது.

கிண்டல் அடித்த ரசிகர்கள்

கிண்டல் அடித்த ரசிகர்கள்

பெங்களூர் அணி கோப்பை வெல்லாததால் செம கடுப்பில் இருக்கும் அந்த அணியின் ரசிகர்களும், பிற அணிகளின் ரசிகர்களும் அந்த பதிவின் கீழ் ஒன்று கூடி கிண்டல் அடித்து கும்மி அடித்தனர். அந்த அளவிற்கு பெங்களூர் அணி மற்றும் கோலியை கிண்டல் செய்து இருந்தனர்.

எல்லை மீறல்

எல்லை மீறல்

ஒரு கட்டத்தில் கிண்டல்கள் எல்லை மீறி சென்றதால் பெங்களூர் அணியின் அட்மின் பல ரசிகர்களின் பதிவுகளை பொது மக்கள் பார்வையில் இருந்து மறைத்து வைக்க வேண்டி வந்தது. அந்த நேரத்தில் தான் உள்ளே வந்தது சிஎஸ்கே அணி.

சிஎஸ்கே சிங்கம்

சிஎஸ்கே சிங்கம்

சிஎஸ்கே அணி துவக்கம் முதலே சிங்கத்தை தங்கள் அணியின் அடையாளமாக கொண்டுள்ளது. ட்விட்டரில் கூட பதிவுகளுடன் சிங்கத்தின் ஈமோஜியை பதிவிடும் அந்த அணி. இந்த நிலையில், கோலியை சிங்கத்துடன் பதிவிட்டதால் சிஎஸ்கே அணி அதை வைத்தே பெங்களூர் அணியை கிண்டல் செய்தது.

உன் தலைமுடி..

உன் தலைமுடி..

அந்த கிண்டல் பதிவு - "அம்மா.. உன்னை காணாமல் நாள் முழுவதும் அழுது கொண்டே இருந்தேன். நீ எங்கே போனாய்? உன் தலைமுடியை நீ என்ன செய்து வைத்து இருக்கிறாய்?". அதாவது சிஎஸ்கே அணியை தாய் சிங்கமாக பாவித்து, சிஎஸ்கே தாய் சிங்கம், கோலி எனும் மகனை பிரிந்து வாடுவதை போல பதிவிட்டு இருந்தது.

சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாட்டம்

சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்த பதிவை கண்ட சிஎஸ்கே ரசிகர்கள் சிஎஸ்கே அட்மினை கொண்டாடினர். பெங்களூர் அணியை பங்கம் செய்து விட்டதாக கூறி குஷியானார்கள். சிலர் பெங்களூர் அணி அட்மின் இந்தப் பதிவையும் மறைத்து வைக்கப் போகிறார் என கூறி சிரித்து மகிழ்ந்தனர்.

Story first published: Saturday, August 15, 2020, 20:32 [IST]
Other articles published on Aug 15, 2020
English summary
IPL 2020 : CSK admin made fun of RCB tweet comparing Kohli to Lion. Fans are celebrating the reply from CSK admin.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+