Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவ்ளோதான் எல்லாரும் கிளம்புங்க.. கடையை இழுத்து மூடிய சிஎஸ்கே.. தோனி ரசிகர்கள் ஏமாற்றம்!

சென்னை : ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வந்த பயிற்சியை ரத்து செய்துள்ளது.

Recommended Video

CSK cancels IPL practice session

கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கூட்டமாக மக்கள் கூடுவதை தவிர்க்க அரசும் அறிவுறுத்தி வரும் நிலையில், சிஎஸ்கே அணியின் பயிற்சி ரத்து செய்யபபட்டது.

தோனி ரசிகர்கள் ஏமாற்றம்

தோனி ரசிகர்கள் ஏமாற்றம்

இதனால் தோனி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தோனி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, முரளி விஜய், ஹர்பஜன் சிங் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டு வந்ததை காண முடியாது என்பதால் அவர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

நான்காவது கோப்பை

நான்காவது கோப்பை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது. கடந்த சீசனில் இறுதிப் போட்டியில் கடைசி பந்து வரை போராடி தோல்வி அடைந்து இருந்தது. இந்த நிலையில், நான்காவது கோப்பை வெல்லும் நோக்கில் அந்த அணி தயார் ஆகி வந்தது.

சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை

சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை

வயதானவர்கள் அணி என கிண்டல் செய்யப்படும் சிஎஸ்கே அணியின் பலமும் அவர்கள் தான். தோனி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங், முரளி விஜய் என சர்வதேச போட்டிகளில் கடந்த சில மாதங்களாக ஆடாத வீரர்களைக் கொண்டு அந்த அணி இந்த முறை களம் காண உள்ளது.

பயிற்சி

பயிற்சி

அதனால், அவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கும் நோக்கில் பிப்ரவரி மாதம் முதலே பயிற்சியை துவங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மார்ச் 2 முதல் தோனியும் பயிற்சியை துவங்கினார். இவர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி செய்து வந்தனர்.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள்

ஆயிரக்கணக்கான ரசிகர்கள்

கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் சிஎஸ்கே வீரர்களின் பயிற்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். தோனி பயிற்சியில் சிக்ஸ் அடித்த போது அவர்கள் ஆரவாரம் செய்தனர். பயிற்சியே திருவிழா போல இருந்தது.

தள்ளி வைப்பு

தள்ளி வைப்பு

இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று துவங்காது என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 15 வரை ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்பும் துவங்குமா என தெரியாத நிலை தான் உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 80க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடரும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடர், அடுத்து மீண்டும் துவங்கும் போது ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் தான் நடைபெறும் என கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் பயிற்சியில் தோனியை ஆசை தீர காணலாம் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு பயிற்சி ரத்து செய்யப்பட்டது ஏமாற்றம் அளித்துள்ளது.

பார்வையாளர்கள் பகுதி

பார்வையாளர்கள் பகுதி

ஐபிஎல் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் பார்வையாளர்கள் பகுதியில் ஐ, ஜே, கே பிரிவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று பிரிவுகளும் கடந்த 8 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, March 14, 2020, 14:22 [IST]
Other articles published on Mar 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+