Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 பக்கமும் அட்டாக்.. எந்த டீமா இருந்தாலும் காலி.. தோனியின் அதிர வைக்கும் திட்டம்!

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆஃப் செல்ல இரண்டு அதிரடி திட்டங்களை கையில் எடுத்துள்ளது.

இனி இழக்க எதுவுமே இல்லை என்ற நிலையில் தான் கேப்டன் தோனி பழைய பாணி திட்டங்களை விட்டுவிட்டு, அதிரடிக்கு மாறி உள்ளார்.

பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் எதிரணிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போது தான் முதலில் பேட்டிங் செய்தாலும், சேஸிங் செய்தாலும் சிஎஸ்கே வெற்றி பெற முடியும்.

என்ன திட்டம்?

என்ன திட்டம்?

இந்த நிலையில், தோனி பேட்டிங் ஆர்டரை மாற்றி உள்ளார். டாப் ஆர்டர் மற்றும் பினிஷிங்கில் முழுவதும் அதிரடி வீரர்களை ஆட வைக்க உள்ளார். அதே போல, பந்துவீச்சில் கடந்த ஆண்டுகளில் ஆறு பேரை பயன்படுத்தி வந்த அவர் இந்த முறை ஏழு பந்துவீச்சாளர்களை பயன்படுத்த உள்ளார்.

சிஎஸ்கே பிளே-ஆஃப்

சிஎஸ்கே பிளே-ஆஃப்

சிஎஸ்கே அணி இதுவரை 8 போட்டிகளில் ஆடி 6 புள்ளிகள் பெற்றுள்ளது. மீதமுள்ள ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வென்றால் சிஎஸ்கே அணி உறுதியாக பிளே-ஆஃப் செல்லும். ஆனால், அது சாதாரண விஷயம் அல்ல. எதிரணிகளை முழுவதும் அழுத்தத்தில் வைத்தால் மட்டுமே இது சாத்தியம்.

பேட்டிங் ஆர்டர்

பேட்டிங் ஆர்டர்

இந்த நிலையில், பேட்டிங் பலவீனத்தை உடைக்க திட்டமிட்ட கேப்டன் தோனி, துவக்க வீரர் ஒருவரை மாற்றினார். அதன் மூலம் ஒட்டு மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறி விட்டது. சாம் கர்ரன் துவக்க வீரராக ஆட வைத்தார். அதன் மூலம் மிடில் ஆர்டர் பலவீனம் எளிதாக மாறியது.

சாம் கர்ரன்

சாம் கர்ரன்

ஆல் - ரவுண்டர் சாம் கர்ரன் ஆறாம் அல்லது ஏழாம் இடத்தில் பேட்டிங் செய்து வந்தார். அவர் அதிரடி ஆட்டம் ஆடும் திறன் கொண்டவர் என்பதால் அவரை துவக்க வீரராக இறக்கினார் தோனி. அந்த திட்டம் ஹைதராபாத் போட்டியில் வெற்றி பெற்றது. அவர் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

துவக்க வீரர் வாட்சன் மூன்றாம் வரிசைக்கு மாறினார். இதை அடுத்து, மிடில் ஆர்டரில் ராயுடு, தோனி, இடம் பெற்றனர். துவக்க வீரர்கள் ஆட்டமிழந்த உடன் வாட்சன், ராயுடு, தோனி நிலையாக நின்று ஆடுவார்கள். அதன் மூலம் மத்திய ஓவர்களில் விக்கெட் வீழ்ச்சி தடுக்கப்படும்.

பினிஷிங்

பினிஷிங்

அதை அடுத்து ஜடேஜா, தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர் என பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள் அதிரடியாக ரன் குவிப்பார்கள். இது தான் சிஎஸ்கேவின் பேட்டிங் திட்டம். இதன் மூலம் பவர்பிளே ஓவர்கள் மற்றும் இறுதி ஓவர்களில் சிஎஸ்கே அணி அதிரடியாக ரன் சேர்க்கும்.

ஏழு பந்துவீச்சாளர்கள்

ஏழு பந்துவீச்சாளர்கள்

அடுத்து ஏழு பந்துவீச்சாளர்களை தோனி பயன்படுத்த உள்ளார். அதிக ஆல் - ரவுண்டர்களை ஆட வைத்து இதை சாத்தியமாக்க உள்ளார். தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், சாம் கர்ரன் என மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள், பியுஷ் சாவ்லா, கரன் சர்மா, ரவீந்திர ஜடேஜா என மூன்று சுழற் பந்துவீச்சாளர்களும், மித வேகப் பந்துவீச்சாளரான பிராவோவும் களமிறக்க உள்ளார்.

என்ன நடந்தாலும் வெற்றி

என்ன நடந்தாலும் வெற்றி

இதன் மூலம், போட்டியில் என்ன நடந்தாலும் சிஎஸ்கே அணி அடுத்த சில ஓவர்களில் மீள முடியும். பந்துவீச்சில் சுழற் பந்துவீச்சு சொதப்பினால், உடனடியாக வேகப் பந்துவீச்சாளர்களை முழுவதுமாக பயன்படுத்த முடியும். பேட்டிங்கில் விக்கெட் வீழ்ச்சி ஏற்பட்டாலும் கடைசி வரை பேட்டிங் ஆட முடியும்.

Story first published: Thursday, October 15, 2020, 19:40 [IST]
Other articles published on Oct 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+