For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடர்ந்து சொதப்பும் சிஎஸ்கே... டிரெய்னிங் இன்னும் வேணுமோ?

துபாய் : ஐபிஎல்லின் இந்த சீசனுக்கான போட்டிகள் துவங்கி நடைபெற்றுவரும் நிலையில் சிஎஸ்கே இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மோதிய முதல் போட்டியில் அபார வெற்றிபெற்று ரசிகர்களுக்கு அந்த அணி நம்பிக்கை கொடுத்த நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் ஏமாற்றம் அளித்துள்ளது.

முதல் போட்டியில் அந்த அணியின் அம்பத்தி ராயுடு சிறப்பான துவக்கத்தை கொடுத்த நிலையில் அடுத்த இரு போட்டிகளில் அவர் காயம் காரணமாக பங்கேற்கவில்லை.

முதல் போட்டியில் வெற்றி

முதல் போட்டியில் வெற்றி

இந்த ஐபிஎல் சீசன் துவங்கி நடைபெற்றுவரும் நிலையில் சிஎஸ்கே அணி இதுவரை மற்ற அணிகளை காட்டிலும் அதிகமாக 3 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அபாரமாக விளையாடி துவக்கத்தை முறையாக தான் ஆரம்பித்தது சிஎஸ்கே.

சிறப்பாக விளையாடிய ராயுடு

சிறப்பாக விளையாடிய ராயுடு

இந்த துவக்கப் போட்டியில் அந்த அணியின் அம்பத்தி ராயுடு அடித்த 70 ரன்கள் சிறப்பாக கைகொடுத்தது. ஆனால் இதையடுத்து காயம் காரணமாக அவர் அடுத்த இரு போட்டிகளில் பங்கேற்கவில்லை. இது அந்த அணிக்கு பின்னடைவை தந்துள்ளது.

ஒருவார கால அவகாசம்

ஒருவார கால அவகாசம்

தற்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு எதிராக அடுத்த போட்டியை விளையாட ஒருவார கால அவகாசம் உள்ள நிலையில் அந்த அணி தன்னுடைய குறைகளை நிவர்த்தி செய்ய போதிய நேரம் எடுத்துக் கொண்டு சரிசெய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

யூஏஇ கண்டீசனுக்கு தடுமாறும் ஸ்பின்னர்கள்

யூஏஇ கண்டீசனுக்கு தடுமாறும் ஸ்பின்னர்கள்

இந்திய களத்தில் சிஎஸ்கே ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும் அவர்களால் யூஏஇயின் கண்டீசனுக்கு தங்களை மாற்றிக் கொள்வது சிரமமாக உள்ளது. குறிப்பாக அந்த அணியின் ரவீந்திர ஜடேஜா மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் கடந்த இரு போட்டிகளில் திணறி வருகின்றனர்.

அதிகபட்சமாக பார்ட்னர்ஷிப்பில் 56 ரன்கள்

அதிகபட்சமாக பார்ட்னர்ஷிப்பில் 56 ரன்கள்

மேலும் துவக்க ஆட்டக்காரர்களும் சொதப்பி வருகின்றனர். ஷேன் வாட்சன் மற்றும் விஜய் ஆகியோர் இதுவரை ஆடிய போட்டிகளில் பார்ட்னர்ஷிப்பில் அதிகபட்சமாக 56 ரன்களை மட்டுமே எடுத்துள்ளனர். டிவைன் பிராவோ அணியில் இணைந்தால் அணிக்கு மேலும் வலிமை கூடும்.

முதலில் களமிறங்க விருப்பம்

முதலில் களமிறங்க விருப்பம்

தோனியின் பேட்டிங் ஆர்டரும் இந்த சீசனில் சிறப்பாக இல்லாத நிலை காணப்படுகிறது. அவர் தனது சிறப்பான பேட்டிங்களை தர முடியாமல் உள்ளார். அவர் போட்டியில் முதலில் களமிறங்கி விளையாட வேண்டும் என்பது அனைவரது விருப்பமாக உள்ளது.

நெருக்கடி சூழலை சமாளிக்க வியூகம்

நெருக்கடி சூழலை சமாளிக்க வியூகம்

இந்நிலையில் அணியின் பேட்டிங் ஆர்டரை மாற்றி அமைத்து அடுத்த போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என்று பிளமிங் தெரிவித்துள்ளார். பேட்டிங் ஆர்டரை மாற்றுவது அணியின் இயல்பு இல்லை என்று தெரிவித்துள்ள அவர், ஆனால் தற்போதைய நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள அதை முயற்சித்து பார்ப்பது சிறப்பானது என்று கூறியுள்ளார்.

Story first published: Sunday, September 27, 2020, 14:48 [IST]
Other articles published on Sep 27, 2020
English summary
To keep changing the batting order is not really our style -Fleming
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+