For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னை சேப்பாக்கம் போல.. தப்புக்கணக்கு போட்ட சிஎஸ்கே.. ரகசியத்தை உடைத்த பேட்டிங் கோச்!

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது.

அணியை மாற்றியும் சிஎஸ்கே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. சிஎஸ்கேவில் என்ன தான் பிரச்சனை? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸி இதுபற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார். என்ன பிரச்சனை என்ற உண்மையை உடைத்து இருக்கிறார்.

சிஎஸ்கே தோல்விகள்

சிஎஸ்கே தோல்விகள்

சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடரில் ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது. அந்த அணியில் திறமையான கேப்டன் என அறியப்படும் தோனி இருந்தும் வெற்றிப் பாதைக்கு சிஎஸ்கே அணி திரும்பவில்லை. மோசமான நிலையில் உள்ளது அந்த அணி.

அணி மாற்றம்

அணி மாற்றம்

முதல் மூன்று போட்டிகளுக்கு பின் அணியை மாற்றி அமைத்தார் தோனி. அது சிறந்த அணியாக இருந்தது. அப்படி அணியை மாற்றி அமைத்த பின்னும் மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது சிஎஸ்கே. மிடில் ஆர்டர் பேட்டிங்கில் தான் தவறு உள்ளது என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

ஒரு வெற்றி

ஒரு வெற்றி

பிராவோ, அம்பதி ராயுடு என இரண்டு சிறந்த வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்ட பின் சிஎஸ்கே அணி ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது. அடுத்து பஞ்சாப் அணிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

மீண்டும் தோல்வி

மீண்டும் தோல்வி

அதன் பின் சிஎஸ்கே வெற்றிப் பாதைக்கு திரும்பி விட்டதாக நினைத்த போதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சேஸிங்கில் மீண்டும் சொதப்பி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சிஎஸ்கே.

சென்னை சேப்பாக்கம்

சென்னை சேப்பாக்கம்

இந்த தோல்விகளுக்கு காரணம் குறித்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸி பேசி உள்ளார். சிஎஸ்கே அணி இத்தனை காலமும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை மையமாக வைத்தே அணியை தேர்வு செய்து வந்தது என்றார்.

மந்தமான ஆடுகளம்

மந்தமான ஆடுகளம்

சென்னை சேப்பாக்கம் மைதானம் மந்தமான ஆடுகளம். அங்கேசுழற் பந்துவீச்சாளர்கள் மற்றும் மித வேக பந்துவீச்சாளர்களுக்கு தான் வேலை அதிகம். சிஎஸ்கே அணியிலும் அதிக சுழற் பந்துவீச்சாளர்கள், மித வேகப் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று இருந்தனர்.

வேகப் பந்துவீச்சு

வேகப் பந்துவீச்சு

தற்போது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் நிலையில் அங்கேயும் மந்தமான ஆடுகளங்கள் தான் என்பதால் சிஎஸ்கே அதை வைத்தே அணியை தேர்வு செய்தது. ஆனால், அங்கே இன்னும் வேகப் பந்துவீச்சுக்கே ஆடுகளங்கள் அதிகம் ஒத்துழைக்கின்றன.

மாறுவார்கள்

மாறுவார்கள்

கடந்த 2018 சீசனில் சென்னையை விட்டு புனேவுக்கு சிஎஸ்கே அணி மாறிய போது வீரர்கள் அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டார்கள். அதே போல இப்போதும் மாறிய சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள் என நம்புவதாக கூறி உள்ளார் ஹஸி.

Story first published: Thursday, October 8, 2020, 20:34 [IST]
Other articles published on Oct 8, 2020
English summary
IPL 2020 News in Tamil : : CSK missing Chennai Chepauk pitch. That is one of the reason for CSK losses.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+