Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாட்சனுடன் ஓபனிங் இறங்கப் போகும் இளம் வீரர்.. செம ட்விஸ்ட்.. தோனி திட்டம் இதுதான்.. கசிந்த தகவல்!

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் துவக்க ஜோடி மாற்றப்பட உள்ளதாக ஒரு பரபர தகவல் வலம் வருகிறது.

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற அழுத்தத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி, பல்வேறு மாற்றங்களை செய்ய உள்ளது.

மூன்று போட்டிகளிலும் அந்த அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. தோல்விகளுக்கு அதுவும் ஒரு முக்கிய காரணம் என்ற நிலையில் துவக்க வீரராக இளம் வீரரை ஆட வைக்க ஒரு திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

சிஎஸ்கே தோல்விகள்

சிஎஸ்கே தோல்விகள்

சிஎஸ்கே அணி இந்த சீசனில் இதுவரை மூன்று போட்டிகளில் ஆடி உள்ளது. அதில் முதல் போட்டியில் வெற்றி பெற்றாலும், அடுத்த இரண்டு போட்டிகளில் படுதோல்வி அடைந்தது. சேஸிங்கில் வெற்றிக்காக போராடாமல் சரணடைந்தது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் துவக்கம் சரியாக இல்லாததும்,அந்த அணியின் சேஸிங் திட்டம் சரியாக அமையாததும் தான். துவக்க வீரர்கள் ஷேன் வாட்சன் - முரளி விஜய் ஒரு போட்டியில் மட்டுமே முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களை கடந்து ரன் சேர்த்தனர். ஆனால், அதிலும் முரளி விஜய் சொதப்பினார்.

முரளி விஜய் பார்ம்

முரளி விஜய் பார்ம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் 217 ரன்களை சேஸிங் செய்த போதுவாட்சன் அதிரடி ஆட்டம் ஆடினாலும், முரளி விஜய் ரன் குவிக்கவே திணறினார். 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதனால், அடுத்து வந்த பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது.

அதிருப்தியில் தோனி

அதிருப்தியில் தோனி

முரளி விஜய் மூன்று போட்டிகளில் மொத்தமே 32 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மூன்று போட்டிகளில் அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் 100க்கு கீழே தான் உள்ளது. அவர் மீது கேப்டன் தோனி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரை நீக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ராயுடு வருகிறார்

ராயுடு வருகிறார்

இதனிடையே அம்பதி ராயுடு காயத்தில் இருந்து மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளார். அவருக்கு பதில் ஒரு இந்திய வீரரை நீக்க வேண்டும். மற்ற வீரர்களை நீக்குவதை விட முரளி விஜய்யை நீக்குவதே சரியான முடிவு என்பதால் தோனி நிச்சயம் அவரை நீக்குவார்.

துவக்க வீரர் மாற்றம்

துவக்க வீரர் மாற்றம்

முரளி விஜய் நீக்கப்படும் பட்சத்தில் வேறு யாரை துவக்கக் வீரராக களமிறக்குவது? அம்பதி ராயுடு நான்காம் வரிசையிலும், பாப் டுபிளெசிஸ் மூன்றாம் வரிசையிலும் சிறப்பாக ஆடி உள்ளனர். அவர்கள் இடத்தை மாற்றுவது சரியான முடிவாக இருக்காது.

ருதுராஜ் கெயிக்வாட்

ருதுராஜ் கெயிக்வாட்

இந்த நிலையில் தான் இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் துவக்க வீரராக இறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவர் இரண்டு போட்டிகளில் மிடில் ஆர்டரில் இறங்கினார். ஆனால்,சரியாக ரன் குவிக்கவில்லை. விரைவிலேயே சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சரியான முடிவா?

சரியான முடிவா?

ருதுராஜ் கெயிக்வாட் அனுபவம் வாய்ந்த வீரர் இல்லை. எனினும், தற்போது வெற்றிக்காக போராடி வரும் சிஎஸ்கே அணி அவருக்கு வாய்ப்பு அளிப்பதால் எந்த பாதிப்பையும் அடையப் போவதில்லை. அவர் ஒருவேளை துவக்க வீரராக சிறப்பாக ஆடினால் அது இந்த சீசனில் சிஎஸ்கே அணியை பலமானஅணியாக மாற்றும்.

வாட்சன் நிலை

வாட்சன் நிலை

மற்றொரு துவக்க வீரர் ஷேன் வாட்சன் மூன்று போட்டிகளில், ஒரு முறை சிறப்பாக ஆடி உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 21 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். அவர் இனி வரும் போட்டிகளிலும் அதே போல ஆடினால் சிஎஸ்கே அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும்.

Story first published: Friday, October 2, 2020, 13:08 [IST]
Other articles published on Oct 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+