Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பார்த்தே ஆகணும்.. அடம் பிடித்த ரசிகர்கள்.. தோனி வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே.. ரெய்னா விசில் ஹைலைட்!

சென்னை : தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில் தோனியின் ஒவ்வொரு அசைவையும் காண துடித்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

Recommended Video

IPL 2020: Dhoni அடித்த Sixer! Whistle போட்ட Raina! | OneIndia Tamil

ஆகஸ்ட் 15 முதல் 20 வரை தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்று இருந்தார்.

அவர் பயிற்சியின் போது அதிரடியாக பேட்டிங் ஆடியதாகவும், சிக்ஸர்கள் பறந்ததாகவும் அந்த அணியின் அதிகாரி ஒருவர் கூற, அதுதான் ரசிகர்களை ஆர்வத்தை தூண்டி விட்டது.

தோனி

தோனி

தோனி 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் எந்த கிரிக்கெட் போட்டியிலும் ஆடவில்லை. கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கி இருந்தார். எனினும், 2020 ஐபிஎல் தொடரில் ஆடி, பின் இந்திய அணியிலும் இடம் பெறுவார் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

ஆனால், கொரோனா வைரஸ் அனைத்து திட்டங்களையும் மாற்றி அமைத்தது. டி20 உலகக்கோப்பை தொடர் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. 2020 ஐபிஎல் தொடர் மட்டுமே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ளது. அதற்காக தயாராக சென்னை வந்தார் தோனி.

ஓய்வு அறிவிப்பு

ஓய்வு அறிவிப்பு

சென்னை வந்த மறுநாள் திடீரென தன் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில் இனி ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே அவரை பார்க்க முடியும் என்பதால் ரசிகர்களின் ஆர்வம் பன்மடங்காக அதிகரித்துள்ளது.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

தோனி எப்படி பேட்டிங் செய்கிறார்? பயிற்சியில் அதிரடி ஆட்டம் ஆடுகிறாரா? என அறிய ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். அதற்கேற்ப சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் சிஎஸ்கே அணி வீரர்களின் பயிற்சி பற்றி பேட்டி அளித்தார்.

அதிரடி பேட்டிங்

அதிரடி பேட்டிங்

அவர் கூறுகையில், தோனி பயிற்சியில் அதிரடியாக பேட்டிங் செய்ததாகவும், சிக்ஸர்கள் பறந்ததாகவும் கூறினார். இதை அடுத்து தோனி ரசிகர்கள் அந்த பயிற்சி வீடியோவை பார்த்தே ஆக வேண்டும் என சமூக வலைதளங்களில் முறையிட்டு வந்தனர்.

பார்த்தே ஆகணும்

பார்த்தே ஆகணும்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பதிவுகளின் கீழ் தங்கள் கோரிக்கையை வைத்து வந்தனர். இந்த நிலையில், சிஎஸ்கே அணி ஒட்டு மொத்த சிஎஸ்கே அணி பயிற்சி முகாமையும் சுருக்கி சிறிய வீடியோவாக வெளியிட்டுள்ளது.

சிக்ஸர்

சிக்ஸர்

அதில் தோனி இறுதியில் சிக்ஸர் அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சுழற் பந்துவீச்சாளர் பியுஷ் சாவ்லா, வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் என இருவரது பந்துகளில் தோனி சிக்ஸர் அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

சுரேஷ் ரெய்னா விசில்

சுரேஷ் ரெய்னா விசில்

இறுதியில் தோனி அடித்த சிக்ஸர் வலையை தாண்டி மேலே பறந்து செல்லும் போது சுரேஷ் ரெய்னா, தோனிக்கு பின்னே நின்றபடி விசில் அடித்து அதை கொண்டாடியது தான் இதில் சிறப்பான பகுதி. இந்த வீடியோ தோனி ரசிகர்கள் இடையே வைரலாக பரவி வருகிறது.

ரசிகர்கள் இல்லை

ரசிகர்கள் இல்லை

சாதாரண நாட்களில் சிஎஸ்கே அணி பயிற்சி செய்தால் சேப்பாக்கம் மைதானத்தில் சுமார் 15,000 ரசிகர்களுக்கும் மேல் கூடுவார்கள். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, August 22, 2020, 19:32 [IST]
Other articles published on Aug 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+