Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம பதிலடி.. ஜடேஜாவுக்காக வரிந்து கட்டிக் கொண்டு இறங்கிய சிஎஸ்கே.. சர்ச்சை வீரருக்கு நோஸ் கட்!

சென்னை : ஜடேஜாவை முன்பு மோசமான விமர்சனம் செய்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர், பிசிசிஐயின் வர்ணையாளர்கள் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், ஜடேஜாவுக்கு ஆதரவாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு நோஸ் கட் கொடுப்பது போல ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளது.

அதில், ஜடேஜாவை எந்த வார்த்தையை பயன்படுத்தி விமர்சித்தாரோ, அதே வார்த்தையை பயன்படுத்தி விமர்சனம் செய்துள்ளது சிஎஸ்கே அணி.

உலகக்கோப்பை

உலகக்கோப்பை

2019 உலகக்கோப்பை தொடரின் போது ஜடேஜா அணியில் தொடர்ந்து இடம் பெறவில்லை. மற்ற சுழற் பந்துவீச்சாளர்களை தான் கேப்டன் கோலி பயன்படுத்தி வந்தார். அது குறித்து அப்போது முன்னாள் வீரர்கள் மத்தியில் விவாதம் நடைபெற்று வந்தது.

மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தன் கருத்தை கூறுகையில், ஜடேஜா முழுமையான வீரர் இல்லை எனக் குறிப்பிட்டு ஆங்கிலத்தில் "bits and pieces" வீரர் என்றார். அதாவது, ஜடேஜா அணிக்கு முழுமையாக உதவ மாட்டார் என்ற பொருளில் அப்படி கூறி இருந்தார்.

ஜடேஜா பதிலடி

ஜடேஜா பதிலடி

அது ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. மேலும், ஜடேஜா மிக வெளிப்படையாக தன் ட்விட்டர் பக்கத்தில் சஞ்சய் மஞ்ச்ரேக்கரை திட்டி, அவரது வர்ணனையை மோசமாக விமர்சனம் செய்து, வாயை மூடுமாறு கூறி இருந்தார்.

மறக்க முடியாத ஆட்டம்

மறக்க முடியாத ஆட்டம்

வெறும் வாய்ப் பேச்சாக மட்டும் இல்லாமல் ஜடேஜா, அந்த உலகக்கோப்பை தொடரில் மறக்க முடியாத பேட்டிங் ஆடினார். அரையிறுதிப் போட்டியில் இந்தியா முன்னணி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்த நிலையில், தோனியுடன் ஜோடி சேர்ந்து போராடி, அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார். இந்தியா தோற்றாலும், அவர் ஹீரோவாக மாறினார்.

மஞ்ச்ரேக்கர் சர்ச்சைகள்

மஞ்ச்ரேக்கர் சர்ச்சைகள்

ஜடேஜா தன் ஆட்டம் மூலமும் மஞ்ச்ரேக்கருக்கு பதிலடி கொடுத்தார். அப்போதும் மஞ்ச்ரேக்கர் தன் சர்ச்சை விமர்சனத்தை நிறுத்துவதாக இல்லை. வழக்கம் போல மும்பை வீரர்களுக்கு சாதகமாக பேசுவதும், தனக்கு பிடிக்காத சில வீரர்களை மட்டம் தட்டுவதுமாக இருந்து வந்தார்.

ஹர்ஷா போக்ளே சர்ச்சை

ஹர்ஷா போக்ளே சர்ச்சை

ஒரு முறை சிறந்த கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய அனுபவம் இல்லாதவர் என்பதை குத்திக் காட்டி, அவரது கருத்தை எதிர்த்தார். அது தரமற்ற பேச்சாக அமைந்தது. அதற்கு பின் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

பிசிசிஐ நீக்கம்

பிசிசிஐ நீக்கம்

இந்த நிலையில், பிசிசிஐ சஞ்சய் மஞ்ச்ரேக்கரை இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரின் வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கி இருந்தது. மேலும், ஐபிஎல் தொடரிலும் அவரை வர்ணனை குழுவில் சேர்க்கவில்லை என தகவல்கள் வெளியாகின.

சிஎஸ்கே பதிலடி

சிஎஸ்கே பதிலடி

மஞ்ச்ரேக்கர் வர்ணனையாளராக இனி செயல்பட மாட்டார் என்பதை கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அவரை கிண்டல் செய்துள்ளது. அதுவும், ஜடேஜாவை விமர்சிக்க, மஞ்ச்ரேக்கர் என்ன வார்த்தையை பயன்படுத்தினாரோ அதே வார்த்தையை பயன்படுத்தி கிண்டல் செய்துள்ளது.

என்ன பதிலடி?

என்ன பதிலடி?

"கிரிக்கெட் போட்டி வர்ணனையை இனி அரைகுறையாக (bits and pieces) கேட்க வேண்டிய தேவை இல்லை" என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பெயரோ, ஜடேஜா பெயரோ குறிப்பிடப்படவில்லை.

ரசிகர்கள் வரவேற்பு

ரசிகர்கள் வரவேற்பு

சென்னை சூப்பர் கிங்ஸ்-இன் அந்த சூசக பதிவிற்கு சிஎஸ்கே ரசிகர்கள் வரவேற்பை அளித்துள்ளனர். சிலர் தோனி, ஜடேஜா பவுண்டரி அடித்தால் அது மோசமான பந்தில் அடிக்கப்பட்ட பவுண்டரி, அதிர்ஷ்டம் என்று அவர் வர்ணனை செய்வார் என சுட்டிக் காட்டி உள்ளனர்.

Story first published: Sunday, March 15, 2020, 15:44 [IST]
Other articles published on Mar 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+