For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் மேட்ச் ஆடி.. படுமோசமாக மண்ணைக் கவ்விய சிஎஸ்கே.. ஊதித் தள்ளிய டெல்லி கேபிடல்ஸ்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக பேட்டிங் செய்து டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 175 ரன்கள் குவித்தது.

அடுத்து ஆடிய சிஎஸ்கே அணி முதல் 10 ஓவர்களில் வெறும் 47 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. போட்டி முடிவில் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

டாஸ்

டாஸ்

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதுவரை ஆறு போட்டிகளில் டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்த ஐந்து அணிகள் தோல்வியை சந்தித்த நிலையில், தோனி மீண்டும் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சிஎஸ்கேவில் புதிய வீரர்

சிஎஸ்கேவில் புதிய வீரர்

சிஎஸ்கே அணியில் லுங்கி நிகிடி நீக்கப்பட்டு ஜோஷ் ஹேசல்வுட் சேர்க்கப்பட்டார். நிகிடி அதிக ரன்கள் விட்டுக் கொடுத்ததை அடுத்து அவர் நீக்கப்பட்டார். அம்பதி ராயுடு இந்தப் போட்டியிலும் ஆடவில்லை. ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

டெல்லி அதிரடி ரன் குவிப்பு

டெல்லி அதிரடி ரன் குவிப்பு

டெல்லி அணிக்கு ப்ரித்வி ஷா - தவான் அதிரடி துவக்கம் அளித்தனர். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட் ஜோடியும் அதிரடியாக ரன் குவித்தது. சிஎஸ்கே அணி 10 ஓவர்களுக்குப் பின் ஓரளவு ரன்களைக் கட்டுப்படுத்தி டெல்லி 200 ரன்கள் குவிப்பதை தடுத்தது.

ப்ரித்வி ஷா அபாரம்

ப்ரித்வி ஷா அபாரம்

டெல்லி அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷா 43 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். தவான் முதலில் படு நிதான ஆட்டம் ஆடினாலும் பின் வேகம் எடுத்தார். அவர் 27 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். முதல் விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் 94 ரன்கள் சேர்த்தனர்.

ஸ்ரேயாஸ் - பண்ட் கூட்டணி

ஸ்ரேயாஸ் - பண்ட் கூட்டணி

அடுத்து 13வது ஓவரில் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் - ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ரன் சேர்த்தனர். எனினும், சில ஓவர்களில் அவர்களால் ரன் குவிக்க முடியவில்லை. 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் எடுத்த டெல்லி அணி 200 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

மீண்ட பவுலிங்

மீண்ட பவுலிங்

ஆனால், சிஎஸ்கே அணி பந்துவீச்சில் மீண்டதால் கடைசி 10 ஓவர்களில் டெல்லி அணியால் 87 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பண்ட் 37* ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது.

சிஎஸ்கே அணிக்கு சவால்

சிஎஸ்கே அணிக்கு சவால்

சிஎஸ்கே அணிக்கு 176 ரன்கள் என்ற இலக்கு சவாலான ஒன்று தான். டெல்லி அணி பந்துவீச்சில் விட்டுக் கொடுக்காது என்பதால் போட்டி சுவாரசியமாக இருக்கும். முரளி விஜய் - ஷேன் வாட்சன் சிஎஸ்கே அணிக்கு துவக்கம் அளித்து ஆடினர்.

சுமார் துவக்கம்

சுமார் துவக்கம்

முரளி விஜய் 10, ஷேன் வாட்சன் 14 ரன்கள் மட்டுமே எடுத்து அதிக பந்துகளை வீணடித்து மோசமான துவக்கம் அளித்தனர். வழக்கம் போல பாப் டுபிளெசிஸ் ஒரு புறம் நிலைத்து நின்று ஆட, ருதுராஜ் கெயிக்வாட் 5, ஜாதவ் 26 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

47 ரன்கள்

47 ரன்கள்

அனைத்து பேட்ஸ்மேன்களும் பெரிய இலக்கை சேஸிங் செய்கிறோம் என்பதை மறந்து டெஸ்ட் போட்டி போல நிதான ஆட்டம் ஆடினர், சிஎஸ்கே அணி முதல் பத்து ஓவர்களில் 47 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அதன் பின்னும் கூட அந்த அணி பெரிய அளவில் அதிரடி ஆட்டம் ஆடவில்லை.

தோனி ஏமாற்றம்

தோனி ஏமாற்றம்

தோனி ஐந்தாம் வரிசையில் இறங்கினார். அவர் களமிறங்கிய போது ஒரு பந்துக்கு 3 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அப்போது தோனி சிக்ஸ் அடித்து வெற்றிக்கு முயல்வார் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவரால் சரியாக பந்துகளை அடிக்க முடியவில்லை. அவர் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தோல்வி

தோல்வி

சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணியின் சேஸிங் அணுகுமுறை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

Story first published: Friday, September 25, 2020, 23:35 [IST]
Other articles published on Sep 25, 2020
English summary
IPL 2020 News in Tamil : CSK vs DC - Chennai Super Kings vs Delhi Capitals match result.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+