Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs KKR : 1 பந்தில் 1 ரன் தேவை.. ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஜடேஜா.. கடைசி பந்து வரை திக்திக்!

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் கடைசி பந்து வரை பரபரப்பு நீடித்தது. ஜடேஜா மட்டும் இல்லையென்றால் சிஎஸ்கே அணி இந்தப் போட்டியை வெல்ல வாய்ப்பே இல்லை.

கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை வரை போட்டி சென்றது. ஜடேஜா கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து சிஎஸ்கே அணியை ஜெயிக்க வைத்தார்.

ஜடேஜா மட்டுமே..

ஜடேஜா மட்டுமே..

கடைசி இரு ஓவர்களில் 30 ரன்கள் தேவை எனும் நிலையில் ஜடேஜா மட்டுமே அதில் 26 ரன்களை எடுத்தார். கொல்கத்தா அணி இந்த தோல்வியால் பிளே-ஆஃப் வாய்ப்பை சிக்கலாக மாற்றிக் கொண்டது. சிஎஸ்கே அணி இந்த ஆறுதல் வெற்றியால் குஷியானது.

கொல்கத்தா அணி நிலை

கொல்கத்தா அணி நிலை

2020 ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை எளிதாக்க முடியும் என்ற நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆடியது. சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில் ஆடியது.

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி டாஸ் வென்றார். அவர் பனிப் பொழிவு இரண்டாம் பாதியில் இருக்கும் என்பதால் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணிக்கு ஷுப்மன் கில் - நிதிஷ் ராணா துவக்கம் அளித்தனர்.

கொல்கத்தா பேட்டிங்

கொல்கத்தா பேட்டிங்

கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு ஷுப்மன் கில் - நிதிஷ் ராணா துவக்கம் அளித்தனர். கில் 17 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். ராணா ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

நிதிஷ் ராணா

நிதிஷ் ராணா

நிதிஷ் ராணா 61 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார். கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். இவர்கள் இருவர் மட்டுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சிறப்பாக ஆடிய பேட்ஸ்மேன்கள்.

கொல்கத்தா ஸ்கோர்

கொல்கத்தா ஸ்கோர்

கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே அணிக்கு இது சவாலான இலக்காக கருதப்பட்டது. அந்த அணியில் பாப் டுபிளெசிஸ் நீக்கப்பட்டு இருந்த நிலையில் கொல்கத்தா அணிக்கு இந்தப் போட்டி சாதகமாக இருந்தது.

சிஎஸ்கே துவக்கம்

சிஎஸ்கே துவக்கம்

இந்த நிலையில் வாட்சன் 19 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து சிஎஸ்கே அணியை மீண்டும் ஏமாற்றினார். அடுத்து வந்த ராயுடு அதிரடி ஆட்டம் ஆடினார். 20 பந்துகளில் 38 ரன்கள் குவித்து ரன் ரேட்டை ஏற்றினார்.

ருதுராஜ் அதிரடி

ருதுராஜ் அதிரடி

துவக்க வீரர் ருதுராஜ் கெயிக்வாட் கடந்த போட்டி போல இந்த முறையும் நங்கூரம் போட்டு நின்று ஆடினார். அரைசதம் கடந்த அவர் 53 பந்துகளில் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் 18வது ஓவரில் தான் ஆட்டமிழந்தார். அப்போது ஜடேஜா களமிறங்கி, சாம் கர்ரனுடன் ஜோடி சேர்ந்தார்.

மாற்றிய ஜடேஜா

மாற்றிய ஜடேஜா

கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் இருந்தது சிஎஸ்கே. அப்போது ஜடேஜா பெர்குசன் வீசிய 19வது ஓவரில் 2 ஃபோர், 1 சிக்ஸ் அடித்து தெறிக்கவிட்டார். அந்த ஓவரில் மட்டும் சிஎஸ்கே 20 ரன்கள் எடுத்தது.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

கம்லேஷ் நாகர்கோட்டி வீசிய கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் சாம் கர்ரன் முதல் மூன்று பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். 4வது பந்தை டாட் பால் ஆடிய ஜடேஜா அடுத்த பந்தில் சிக்ஸ் அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் ஜடேஜா அசத்தலாக சிக்ஸ் அடித்தார்.

சிஎஸ்கே வெற்றி

சிஎஸ்கே வெற்றி

சிஎஸ்கே அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. ஜடேஜா 11 பந்துகளில் 31 ரன்கள் குவித்து இருந்தார். இந்த தோல்வி மூலம் ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகளின் பிளே-ஆஃப் வாய்ப்பும் பறிபோகாமல் காப்பாற்றி உள்ளது சிஎஸ்கே.

Story first published: Thursday, October 29, 2020, 23:50 [IST]
Other articles published on Oct 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+