Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs KKR : டாஸ் வென்ற தோனி.. இரு முக்கிய வெளிநாட்டு வீரர்கள் நீக்கம்.. சிஎஸ்கே அதிரடி!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

சிஎஸ்கே அணியில் பாப் டுபிளெசிஸ், இம்ரான் தாஹிர் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். இது எதிர்பாராத மாற்றமாக இருந்தது.

பிட்ச்

பிட்ச்

போட்டி நடந்த துபாய் பிட்ச் டெல்லி கேபிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி நடந்த அதே பிட்ச் தான். அந்த பிட்ச் எப்படி வேண்டுமானாலும் மாறும். வேகப் பந்துவீச்சுக்கும் ஒத்துழைக்கும். அதே சமயம், பேட்டிங் ஆடவும் ஒத்துழைக்கும்.

இரு வீரர்களுக்கு வாய்ப்பு

இரு வீரர்களுக்கு வாய்ப்பு

மேலும், இரண்டாம் பாதியில் பனிப்பொழிவின் காரணமாக பந்து வீசுவது கடினமாக இருக்கும். இதன் காரணமாக டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணியில் பாப் டுபிளெசிஸ், தாஹிர் நீக்கப்பட்டு, ஷேன் வாட்சன், லுங்கி நிகிடி அணியில் வாய்ப்பு பெற்றனர்.

சிஎஸ்கே அணி விவரம்

சிஎஸ்கே அணி விவரம்

சிஎஸ்கே அணி விவரம் - ருதுராஜ் கெயிக்வாட், ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, தோனி, ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், ஜெகதீசன், மிட்செல் சான்ட்னர், கரன் சர்மா, தீபக் சாஹர், லுங்கி நிகிடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விவரம் - ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், இயான் மார்கன் (கேப்டன்), சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், ரிங்கு சிங், லாக்கி பெர்குசன், கம்லேஷ் நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி

Story first published: Thursday, October 29, 2020, 19:26 [IST]
Other articles published on Oct 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+