Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே!

துபாய் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிதிஷ் ராணாவின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நல்ல ஸ்கோரை எடுத்தது.

ராணா நீண்ட நேரம் பேட்டிங் செய்து 61 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார். கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டம் ஆடினார்.

கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.

லீக் போட்டி

லீக் போட்டி

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி டாஸ் வென்றது. கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு ஷுப்மன் கில் - நிதிஷ் ராணா துவக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 53 ரன்கள் சேர்த்தனர்.

துவக்கம்

துவக்கம்

ஷுப்மன் கில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுனில் நரைன் 7, ரிங்கு சிங் 11, இயான் மார்கன் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். நிதிஷ் ராணா தன் விக்கெட்டை இழக்காமல் நிலையாக நின்று ஆடினார்.

87 ரன்கள்

87 ரன்கள்

ராணா ஓவர்களை தேர்வு செய்து பவுண்டரி அடித்து ஆடினார். 61 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார் அவர். 10 ஃபோர் மற்றும் 4 சிக்ஸ் அடித்து மிரட்டினார் அவர். அவர் ஆட்டமிழந்த பின் தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 21 ரன்கள் குவித்து கொல்கத்தா அணி 172 ரன்கள் எட்ட காரணமாக இருந்தார்.

ராணா ஆட்டம்

ராணா ஆட்டம்

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. ராணா ஆட்டத்தால் மட்டுமே அந்த அணி 170 ரன்கள் வரை தொட்டது. சிஎஸ்கே அணியால் அவரை விரைவாக வீழ்த்த முடியாததே இதற்கு முக்கிய காரணம்.

கட்டுப்படுத்த முடியவில்லை

கட்டுப்படுத்த முடியவில்லை

15 ஓவர்களில் கொல்கத்தா அணி 106 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. ஆனால், அதன் பின் நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டம் ஆடி நல்ல ஸ்கோரை எட்ட உதவினர். அவர்களை தோனியால் கட்டுப்படுத்த முடியவில்லை.

பந்துவீச்சு எப்படி?

பந்துவீச்சு எப்படி?

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சில் நிகிடி 2, சான்ட்னர் 1, ஜடேஜா 1, கரன் சர்மா 1 விக்கெட் வீழ்த்தினர். தீபக் சாஹர் 3 ஓவர்களில் 31 ரன்கள் வாரி இறைத்தார். அதே போல, சான்ட்னர் 3 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்தார். கரன் சர்மா 3 ஓவர்கள் சிறப்பாக வீசியும் தன் கடைசி ஓவரில் 19 ரன்கள் கொடுத்தார்.

Story first published: Thursday, October 29, 2020, 22:20 [IST]
Other articles published on Oct 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+