Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பொங்கி எழுந்த தீபக் ஹூடா.. சரமாரி அடி.. கோட்டை விட்ட சிஎஸ்கே!

அபுதாபி : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 153 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் தீபக் ஹூடா அதிரடி ஆட்டம் ஆடி கடைசி நேரத்தில் ஸ்கோரை உயர்த்தினார்.

சிஎஸ்கே அணி முதல் 15 ஓவர்களில் கட்டுக்கோப்பாக பந்து வீசினாலும் கடைசி 5 ஓவர்களில் சொதப்பியது.

சிஎஸ்கே பந்துவீச்சு

சிஎஸ்கே பந்துவீச்சு

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ராகுல் 29, மயங்க் அகர்வால் 26 ரன்கள் எடுத்தனர்.

கிறிஸ் கெயில்

கிறிஸ் கெயில்

அடுத்து வந்த கிறிஸ் கெயில் 12, பூரன் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதை அடுத்து போட்டியில் சிஎஸ்கே அணியின் கை ஓங்கியது. எப்படியும் பஞ்சாப் அணியை 130-140 ரன்களுக்குள் சிஎஸ்கே தடுத்து நிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

கோட்டை விட்டார்

கோட்டை விட்டார்

ஆனால், கடைசி ஓவர்களில் தீபக் ஹூடா அதிரடி ஆட்டம் ஆடி தெறிக்கவிட்டார். முக்கிய பேட்ஸ்மேன்களை குறி வைத்து தூக்கிய கேப்டன் தோனி உள்ளர் வீரர் தீபக் ஹூடாவிடம் கோட்டை விட்டார். கடைசி 5 ஓவர்களில் பஞ்சாப் அணி 58 ரன்கள் குவித்தது.

62 ரன்கள்

62 ரன்கள்

தீபக் ஹூடா 30 பந்துகளில் 62 ரன்கள் குவித்து சிஎஸ்கே அணியை பதற வைத்தார். பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. அபுதாபியில் 195 ரன்கள் கூட சேஸிங் செய்யப்பட்டதால் இது சிஎஸ்கே அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

சிஎஸ்கே வெற்றி

சிஎஸ்கே வெற்றி

எனினும், சிஎஸ்கே அணி கடைசி 5 ஓவர்களில் மட்டுமே ரன்களை வாரி இறைத்தது. லுங்கி நிகிடி 3 விக்கெட் வீழ்த்தினார். தாக்குர், இம்ரான் தாஹிர், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சிஎஸ்கே அணி 154 ரன்கள் இலக்கை 18.5 ஓவர்களில் எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Sunday, November 1, 2020, 19:48 [IST]
Other articles published on Nov 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+