For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவருக்கா ஸ்பார்க் இல்லை? எந்த சிஎஸ்கே வீரரும் செய்யாத சாதனை.. வரலாறு படைத்த இளம் வீரர்!

அபுதாபி : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் பஞ்சாப் போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார்.

இதன் மூலம் அவர் எந்த சிஎஸ்கே வீரரும் செய்யாத புதிய சாதனை ஒன்றை படைத்தார்.

தோனி இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை என கூறிய பின்னர், ருதுராஜ் கெயிக்வாட் அதிரடியாக ரன் குவித்து வருகிறார்.

ருதுராஜ் கெயிக்வாட்

ருதுராஜ் கெயிக்வாட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2020 ஐபிஎல் தொடரில் இடம் பெற்றார் ருதுராஜ் கெயிக்வாட். தொடருக்கு முன் கொரோனா வைரஸ் பாதிப்பால் அவர் சரியாக பயிற்சி செய்யவில்லை. இந்த நிலையில் அவர் பங்கேற்ற மூன்று போட்டிகளில் சொற்ப ரன்கள் எடுத்தும், டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தார்.

ஸ்பார்க் இல்லை

ஸ்பார்க் இல்லை

இந்த நிலையில், சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த போது பேசிய அணியின் கேப்டன் தோனி, இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் ஜெகதீசனை குத்திக் காட்டி பேசி இருந்தார். அவர் பேச்சு பெரும் சர்ச்சை ஆனது.

மூன்று அரைசதம்

மூன்று அரைசதம்

இந்த நிலையில், ருதுராஜ் கெயிக்வாட் சிஎஸ்கே அணியின் கடைசி மூன்று போட்டிகளில் மூன்று அரைசதம் அடித்தார். அந்த போட்டிகளில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு அவரே முக்கிய காரணமாக விளங்கினார். இதன் மூலம் அவர் முக்கிய சாதனை ஒன்றையும் படைத்தார்.

சாதனை

சாதனை

சிஎஸ்கே அணியில் வேறு எந்த வீரரும் தொடர்ந்து மூன்று போட்டிகளில் அரைசதம் அடித்ததில்லை. அந்த சாதனையை செய்த முதல் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் தான். இது சிஎஸ்கே அணியில் வரலாற்று சாதனை ஆகும்.

பதிலடி

பதிலடி

ஸ்பார்க் இல்லை என்ற விமர்சனத்துக்கு சரியான பதிலடி கொடுத்தார் ருதுராஜ் கெயிக்வாட். இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு கிடைத்த சிறந்த வீரர்களுள் அவரும் ஒருவராக மாறினார். சாம் கர்ரன் துவக்கம் முதலே சிறப்பாக செயல்பட்டு வந்தார். இரண்டு நல்ல இளம் வீரர்களை பெற்றுள்ளது சிஎஸ்கே அணி.

Story first published: Sunday, November 1, 2020, 22:33 [IST]
Other articles published on Nov 1, 2020
English summary
IPL 2020 CSK vs KXIP : Ruturaj Gaikwad new CSK record with three consecutive fifties.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+