Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திருந்தாத சிஎஸ்கே.. சேஸிங் செய்ய வைத்து காலி செய்த கோலி.. பெங்களூர் அபார வெற்றி!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியை முதலில் பந்து வீச அழைத்தது டாஸ் வென்ற பெங்களூர் அணி.

சிஎஸ்கே அணி சேஸிங்கில் சொதப்பி வரும் நிலையில் டாஸ் முடிவு அந்த அணிக்கு எதிராக அமைந்தது. சிஎஸ்கே அணி பேட்டிங்கில் மீண்டும் சொதப்பியது.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

சிஎஸ்கே அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்றார். துபாய் ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்று வருவதால் பேட்டிங் தேர்வு செய்தார். சேஸிங் செய்து தோல்விகளை சந்தித்து வரும் சிஎஸ்கே தொடர்ந்து ஏழாவது முறையாக சேஸிங் செய்தது.

பெங்களூர் பேட்டிங்

பெங்களூர் பேட்டிங்

பெங்களூர் அணி துவக்கத்தில் தடுமாறியது. தீபக் சாஹர் வீசிய ஓவர்களில் ரன் எடுக்க முடியாமல் விக்கெட்களை இழந்தது. ஆரோன் பின்ச் 2, டி வில்லியர்ஸ் டக் அவுட் ஆனார்கள். அதன் பின் கோலி - தேவ்தத் இணைந்து அணியை மீட்டனர்.

கோலி ரன் குவிப்பு

கோலி ரன் குவிப்பு

தேவ்தத் 33 ரன்களில் வெளியேறினார், சுந்தர் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். மறுபுறம் விராட் கோலி அதிரடி ஆட்டம் ஆடினார். தனி ஆளாக அணியை மீட்டார். 52 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார். சிவம் துபே அவருக்கு ஒத்துழைப்பு அளித்து 14 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார்.

சிஎஸ்கே பந்துவீச்சு

சிஎஸ்கே பந்துவீச்சு

பெங்களூர் அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணியின் பந்துவீச்சில் சாஹர், ஜடேஜா கட்டுக் கோப்பாக வீசியும் அவர்களுக்கு முழுமையாக பந்து வீச தோனி வாய்ப்பு அளிக்கவில்லை. கடைசி 4 ஓவர்களில் சிஎஸ்கே அணி 66 ரன்களை வாரிக் கொடுத்தது.

வாட்சன் - பாப் ஏமாற்றம்

வாட்சன் - பாப் ஏமாற்றம்

சிஎஸ்கே அணி 170 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. ஷேன் வாட்சன் - பாப் டுபிளெசிஸ் மீண்டும் ஏமாற்றினர். டுபிளெசிஸ் 8, வாட்சன் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து ராயுடு - ஜெகதீசன் இணைந்து பேட்டிங் செய்தனர்.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

இருவரும் நிதான ஆட்டம் ஆட சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு தேவையான ரன் ரேட் 10, 12 என எகிறத் துவங்கியது. ஜெகதீசன் 28 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தோனி அதிரடியாக ஆட முயன்று 6 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

மீண்டும் சொதப்பல்

மீண்டும் சொதப்பல்

அதன் பின் சாம் கர்ரன் 0, ராயுடு 42, ஜடேஜா 7, பிராவோ 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். சிஎஸ்கே அணி மீண்டும் சேஸிங்கில் சொதப்பியது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது சிஎஸ்கே அணி.

பெங்களூர் வெற்றி

பெங்களூர் வெற்றி

பெங்களூர் அணி சிறப்பாக பந்து வீசி சிஎஸ்கே அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் தன் 5வது தோல்வியை பதிவு செய்தது. பெங்களூர் அணி தன் 4வது வெற்றியை பெற்று 8 புள்ளிகள் பெற்றது.

Story first published: Saturday, October 10, 2020, 23:46 [IST]
Other articles published on Oct 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+