Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நன்றாக ஆடியும்.. அந்த 2 வீரர்களை ஒதுக்கிய தோனி.. அதிர்ந்த ரசிகர்கள்.. ஷாக் சம்பவம்!

துபாய் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பந்துவீச்சின் போது எடுத்த சில முடிவுகள் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

கடந்த போட்டி போலவே ஜடேஜாவை கண்டு கொள்ளவில்லை தோனி. அத்துடன் தீபக் சாஹர் கட்டுக் கோப்பாக வீசிய நிலையில் அவருக்கும் வாய்ப்பு தரவில்லை.

கடைசி ஓவர்களில் பெங்களூர் அணி அதிரடி ஆட்டத்தால் பெரிய அளவில் ரன் குவித்தது. தோனி சரியான பந்துவீச்சாளர்களை பயன்படுத்தாதது தான் இதற்கு காரணம் என்ற கருத்து கூறப்படுகிறது.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

பெங்களூர் அணிக்கு டாஸ் வெற்றி பெரிய அளவில் கை கொடுத்தது. சிஎஸ்கே சேஸிங்கில் பலவீனமாக இருக்கும் நிலையில், விராட் கோலி டாஸ் வென்ற உடன் பேட்டிங் தேர்வு செய்தார். தேவ்தத் படிக்கல் - ஆரோன் பின்ச் துவக்கம் அளித்தனர்.

சறுக்கல்

சறுக்கல்

அந்த அணி பின்ச்சை 2 ரன்களிலும், டி டிவில்லியர்ஸ்-ஐ ரன் எடுக்காத நிலையிலும் இழந்தது. சிஎஸ்கே அணியில் தீபக் சாஹர் பவர்பிளே ஓவரில் ரன்னே எடுக்க முடியாதபடி பந்து வீசி வந்தார். அடுத்து கோலி பேட்டிங் செய்ய வந்தார்.

கை கொடுத்த கோலி

கை கொடுத்த கோலி

மற்ற பேட்ஸ்மேன்கள் சிஎஸ்கே பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். குறிப்பாக தீபக் சாஹர் வீசிய 3 ஓவர்கள் மற்றும் ஜடேஜா வீசிய 2 ஓவர்களில் மிகக் குறைந்த ரன்களே கொடுக்கப்பட்டது. சாஹர் 3 ஓவர்களில் 10 ரன்களும், ஜடேஜா 2 ஓவர்களில் 7 ரன்களும் மட்டுமே கொடுத்திருந்தனர்.

ஜடேஜா ஓவர்

ஜடேஜா ஓவர்

இந்த நிலையில், 16வது ஓவரை கரன் சர்மாவிடம் கொடுத்தார் கேப்டன் தோனி. ஜடேஜா 14வது ஓவரை வீசி இருந்தும், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசி 4 ஓவர்களில் வேகப் பந்துவீச்சு மட்டுமே என்பதால் அதன் பின் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

சாஹர் ஓவர்

சாஹர் ஓவர்

பவர்பிளே ஓவர்களில் மட்டுமே பந்து வீசிய தீபக் சாஹருக்கு கடைசி 4 ஓவர்களில் அந்த மீதமிருந்த ஒரு ஓவர் பந்துவீசும் வாய்ப்பை தோனி வழங்கவில்லை. ஷர்துல் தாக்குர், சாம் கர்ரனுக்கு தான் வாய்ப்பு கிடைத்தது.

கடைசி 4 ஓவர்கள்

கடைசி 4 ஓவர்கள்

கடைசி 4 ஓவர்களில் மட்டும் பெங்களூர் அணி 66 ரன்கள் குவித்தது. தாக்குர் வீசிய இரண்டு ஓவர்களில் தலா 14 ரன்கள் போனது. சாம் கர்ரன் வீசிய ஒரு ஓவரில் 24 ரன்கள் போனது. இந்த 4 ஓவர்களை கோலி குறி வைத்து தாக்கினார்.

தோனி செய்த தவறு

தோனி செய்த தவறு

தோனி கடைசி 4 அல்லது 5 ஓவர்களில் ஜடேஜா மற்றும் தீபக் சாஹருக்கு பந்து வீசும் வாய்பபை அளித்திருந்தால், அவர்களில் ஒருவர் கோலி விக்கெட்டை வீழ்த்தி இருந்தால் சிஎஸ்கே அணிக்கு சாதகமான சூழல் நிலவி இருக்கக் கூடும்.

தோல்வி

தோல்வி

பெங்களூர் அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சிஎஸ்கே அணி சொதப்பலாக ஆடி 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. 37 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சிஎஸ்கே அணியை வீழ்த்தியது.

Story first published: Wednesday, October 14, 2020, 21:10 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+