Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜாதவ் நீக்கம்.. உள்ளே வந்த இளம் வீரர்.. சாட்டையை எடுத்த தோனி.. டாஸ் வென்ற கோலி.. பரபர மோதல்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன.

இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து ஏழாவது முறையாக சேஸிங் செய்ய உள்ளது. அந்த அணியில் அதிரடியாக ஜாதவ் நீக்கப்பட்டுள்ளார்.

சென்னை - பெங்களூர் போட்டி

சென்னை - பெங்களூர் போட்டி

2020 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் போட்டி துபாயில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்த முடிவை எடுக்க ஆடுகளம் தான் முக்கிய காரணம்.

துபாய் ஆடுகளம்

துபாய் ஆடுகளம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்று நகரங்களில் போட்டிகள் நடந்து வரும் நிலையில், துபாய் ஆடுகளம் தொடர்ந்து பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக உள்ளது. இந்த நிலையில், அங்கே முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

சிஎஸ்கே நிலை

சிஎஸ்கே நிலை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து ஏழாவது முறையாக சேஸிங் செய்ய உள்ளது. இதற்கு முன் ஆறு போட்டிகளிலும் சேஸிங் செய்த சிஎஸ்கே அணி அதில் இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தோல்விகளால் மிக மோசமான நிலையில் உள்ளது சிஎஸ்கே.

சிஎஸ்கே முக்கிய மாற்றம்

சிஎஸ்கே முக்கிய மாற்றம்

சிஎஸ்கே அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேதர் ஜாதவ் மோசமான பார்மில் இருக்கும் நிலையில் நீக்கப்பட்டுள்ளார். அவரால் தான் கடந்த போட்டியில் சிஎஸ்கே அணி சேஸிங்கில் தோல்வி அடைந்து இருந்தது. அவருக்கு பதில் தமிழக வீரர் ஜகதீசன் அணியில் இடம் பெற்றுள்ளார்.

பெங்களூர் அணி மாற்றம்

பெங்களூர் அணி மாற்றம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அதிரடியாக மொயீன் அலி, முகமது சிராஜ் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதில் கிறிஸ் மோரிஸ், குர்கீரத் மான் சிங் அணியில் இடம் பெற்றனர். பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்துள்ள போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விவரம் - ஷேன் வாட்சன், பாப் டுபிளெசிஸ், அம்பதி ராயுடு, ஜெகதீசன், தோனி, ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், டிவைன் பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், கரன் சர்மா

பெங்களூர் அணி

பெங்களூர் அணி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் விவரம் - தேவ்தத் படிக்கல், ஆரோன் பின்ச், விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், குர்கீரத் மான் சிங், வாஷிங்க்டன் சுந்தர், சிவம் துபே, கிறிஸ் மோரிஸ், நவ்தீப் சைனி, இசுரு உடானா, யுஸ்வேந்திர சாஹல்

Story first published: Saturday, October 10, 2020, 19:25 [IST]
Other articles published on Oct 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+