மெகா சாதனை.. ஐபிஎல்-ஐயும் தாண்டி புதிய மைல்கல்.. வரலாறு படைத்த விராட் கோலி!
துபாய் : விராட் கோலி ஐபிஎல் தொடரையும் தண்டி ஒரு புதிய மைல்கல் சாதனை படைத்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக கோலி இந்த பெரிய சாதனையை செய்துள்ளார். அந்த அணியில் முதல் ஐபிஎல் சீசன் முதல் ஆடி வரும் நிலையில் கோலி இந்த சாதனையை எட்ட முடிந்தது.

சிஎஸ்கே போட்டி
2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் விராட் கோலி தனி ஆளாக நின்று 90 ரன்கள் குவித்து பெங்களூர் அணியை 169 ரன்கள் எட்டச் செய்தார்.

வரலாற்று சாதனை
அவர் இந்தப் போட்டியில் ஜடேஜா வீசிய 14வது ஓவரில் 31 ரன்களை எட்டினார். அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக அவர் எடுத்த 6000மாவது ரன் ஆகும். ஆம், இந்த வரலாற்று சாதனையைத் தான் கோலி செய்தார்.

6000 ரன்கள்
ஐபிஎல் போட்டிகள் மற்றும் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக கோலி ஆடி உள்ளார். இதில் ஐபிஎல் தொடரில் 5576 ரன்களையும், சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் 424 ரன்களையும் எடுத்து மொத்தமாக 6000 ரன்கள் என்ற மைல்கல் சாதனையை செய்தார்.

முதல் பேட்ஸ்மேன்
பெங்களூர் அணிக்காக இந்த மைல்கல் சாதனையை செய்யும் முதல் பேட்ஸ்மேன் கோலி தான். சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் கடந்த சில ஆண்டுகளாக நடக்கவில்லை என்றாலும், அதில் கோலி 15 போட்டிகளில் ஆடி உள்ளார்.

முதல் இடம்
அதில் 2 அரைசதம் உட்பட 424 ரன்கள் குவித்துள்ளார். அதில் அவரது சராசரி 38.54 ஆகும். ஒட்டுமொத்தமாக 285 டி20 போட்டிகள் ஆடி உள்ள கோலி அதில் 9000 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் மற்றும் ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் இந்திய அளவில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் கோலி முதல் இடத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications