
சிஎஸ்கே - பெங்களூர் போட்டி
2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே ஆன போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து இருந்தார்.

பவர்பிளே ஓவர்
துபாயில் முதலில் ஆடும் அணிகள் வெற்றி பெற்று வருவதால் பெங்களூர் அணிக்கு டாஸ் வெற்றி சாதகமாக அமைந்தது. அந்த அணிக்கு தேவ்தத் படிக்கல் - ஆரோன் பின்ச் துவக்கம் அளித்தனர். தீபக் சாஹர் பவர்பிளே ஓவர்களில் மிரட்டலாக பந்து வீசினார்.

துவக்கம்
ஆரோன் பின்ச் அவரது ஸ்விங் பந்து வீச்சில் 2 ரன்கள் எடுத்த நிலையில் பவுல்டு அவுட் ஆனார். அடுத்து கோலி பேட்டிங் செய்ய வந்தார். துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் நிதான ஆட்டம் ஆடி 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

டி வில்லியர்ஸ் டக் அவுட்
அடுத்து வந்த டி வில்லியர்ஸ் எதிர்பாராத விதமாக டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதை அடுத்து பெங்களூர் அணி அழுத்தத்தில் இருந்தது. எனினும், கேப்டன் கோலி அபாரமாக ஆடி ரன் குவித்து வந்தார். வாஷிங்க்டன் சுந்தர் 10 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார்.

தோனி திட்டம்
அடுத்து அதிரடி பேட்ஸ்மேன் சிவம் துபே பேட்டிங் செய்ய வந்தார். கடைசி ஓவர்களில் ரன்கள் கொடுக்கக் கூடாது என தோனி திட்டமிட்டார். ஆனால் தீபக் சாஹருக்கு ஓவர் கொடுக்காமல் ஷர்துல் தாக்குர், சாம் கர்ரன் ஆகியோருக்கு ஓவர் கொடுத்தார்.

குறி வைத்து அடித்தனர்
அந்த ஓவர்களில் கோல,. துபே குறி வைத்து பவுண்டரி அடித்துத் தள்ளினர். கடைசி நான்கு ஓவர்களில் மட்டும் பெங்களூர் அணி 66 ரன்கள் குவித்தது. இதை அடுத்து பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது.

விராட் கோலி ஆட்டம்
விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 52 பந்துகளில் 90 ரன்கள் குவித்திருந்தார். 4 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து இருந்தார். இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 6000 ரன்களையும் கடந்து சாதனை படைத்தார்.

இலக்கு
சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி 150 ரன்களுக்குள் பெங்களூர் அணியை சுருட்ட திட்டமிட்டார். ஆனால், கோலி விக்கெட்டை வீழ்த்த முடியாததால் கடைசி ஓவர்களில் எதிர்பார்த்ததை விட கூடுதல் ரன்களை சேர்த்தது பெங்களூர் அணி. சிஎஸ்கே அணிக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications