For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவரை நம்பி டீம்ல எடுத்தது சுத்த வேஸ்ட்.. பந்தையே பார்க்காமல்.. மோசமாக அவுட் ஆன சிஎஸ்கே வீரர்!

துபாய் : அம்பதி ராயுடு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க வேண்டும் என அனைத்து சிஎஸ்கே ரசிகர்களும் எதிர்பார்த்தனர்.

ஆனால், அவர் மோசமாக ஆடி ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பந்தையே பார்க்காமல் ஆடி அவர் ஆட்டமிழந்த விதம் அதிர்ச்சி அளித்தது.

சிஎஸ்கே அணி மீண்டும் மோசமான நிலையில் சேஸிங் செய்து ஏமாற்றம் அளித்தது.

அம்பதி ராயுடு காயம்

அம்பதி ராயுடு காயம்

அம்பதி ராயுடு சிஎஸ்கே அணியின் முதல் போட்டியில் அபார ஆட்டம் ஆடி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தினார். ஆனால், அடுத்த இரு போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு காயம் ஏற்பட்டது. அந்த இரண்டு போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது.

ரசிகர்கள் கோரிக்கை

ரசிகர்கள் கோரிக்கை

இந்த நிலையில் சிஎஸ்கே ரசிகர்கள் அம்பதி ராயுடு மீண்டும் போட்டிகளில் பங்கேற்றால் மட்டுமே அந்த அணி வெற்றி பெறும் என கூறி வந்தனர். இந்த நிலையில், ஹைதராபாத் போட்டிக்கு முன் அவர் பயிற்சி செய்து போட்டிகளில் பங்கேற்க தயாராக இருந்தார்.

தோனி செய்த மாற்றம்

தோனி செய்த மாற்றம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி சிஎஸ்கே அணியை மாற்றினார். அம்பதி ராயுடு, பிராவோ, ஷர்துல் தாக்குர் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றனர். அம்பதி ராயுடு மீண்டும் அணிக்கு வந்ததால் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றுவிடும் என ரசிகர்கள் நம்பினர்.

ஹைதராபாத் ஸ்கோர்

ஹைதராபாத் ஸ்கோர்

போட்டியில் ஹைதரபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது. வார்னர் 28, மனிஷ் பாண்டே 29, ப்ரியம் கார்க் 51*, அபிஷேக் சர்மா 31 ரன்கள் எடுத்தனர்.

சிஎஸ்கே ஏமாற்றம்

சிஎஸ்கே ஏமாற்றம்

அடுத்து 165 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்த சிஎஸ்கே அணிக்கு மீண்டும் மோசமான துவக்கம் அளித்தார் ஷேன் வாட்சன். அவர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து அம்பதி ராயுடு வந்தார். பாப் டுபிளெசிஸ் உடன் இணைந்து அவர் ஆடினார்.

அம்பதி ராயுடு அவுட்

அம்பதி ராயுடு அவுட்

8 ரன்கள் எடுத்த நிலையில் அம்பதி ராயுடு நடராஜன் பந்துவீச்சை எதிர்கொண்டார். நடராஜன் நேராக ஸ்டம்புகளுக்கு வீசிய பந்தை லெக் ஸ்டம்புக்கு வெளியே ஆட முயன்றார் ராயுடு. பந்தை அவர் சரியாக பார்க்கவேயில்லை. பந்து ஸ்டம்புகளை பதம் பார்த்தது.

நடராஜன் அபாரம்

நடராஜன் அபாரம்

அம்பதி ராயுடு பெரிய பில்டப்புடன் ஆட வந்து பேட்டிங் அடிப்படையில் தவறுசெய்து ஆட்டமிழந்தார். தமிழக வீரர் நடராஜன் துல்லிய பந்துவீச்சால் முக்கிய விக்கெட்டை வீழ்த்தி ஹைதராபாத் அணிக்கு திருப்பம் அளித்தார். சிஎஸ்கே தொடர்ந்து விக்கெட்களை இழந்து தடுமாறியது.

Story first published: Saturday, October 3, 2020, 19:54 [IST]
Other articles published on Oct 3, 2020
English summary
IPL 2020 News in Tamil : CSK vs SRH - Ambati Rayudu lost his wicket without seeing the ball
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+