For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உள்ளூர் வீரர்களை வைத்து சிஎஸ்கேவை முடித்த ஹைதராபாத்.. ஏமாற்றிய தோனி.. மோசமாக தோற்ற சிஎஸ்கே!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் குவித்தது.

சிஎஸ்கே அணி சேஸிங்கில் மீண்டும் சொதப்பி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

வெற்றி அவசியம்

வெற்றி அவசியம்

இரண்டு அணிகளுமே இதுவரை மூன்று போட்டிகளில் ஆடி அதில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன. இரண்டு அணிகளுக்கும் வெற்றி கட்டாயமான ஒன்றாக இருப்பதால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.

முக்கிய மாற்றங்கள்

முக்கிய மாற்றங்கள்

சிஎஸ்கே அணியில் மூன்று வீரர்கள் மாற்றப்பட்டனர். முரளி விஜய், ருதுராஜ் கெயிக்வாட், ஜோஷ் ஹேசல்வுட் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதில் அம்பதி ராயுடு, ஷர்துல் தாக்குர், டிவைன் பிராவோ அணியில் சேர்க்கப்பட்டனர். இது சிஎஸ்கே அணியில் பெரிய மாற்றம் ஆகும்.

பேர்ஸ்டோ டக் அவுட்

பேர்ஸ்டோ டக் அவுட்

ஹைதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. வார்னர் - பேர்ஸ்டோ துவக்கம் அளித்தனர். பேர்ஸ்டோ முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனார். அடுத்து மனிஷ் பாண்டே 21 பந்துகளில் 29 ரன்கள் குவித்தார். வார்னர் 28 ரன்கள் எடுத்தார். வில்லியம்சன் 9 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

உள்ளூர் வீரர்கள் ஆட்டம்

உள்ளூர் வீரர்கள் ஆட்டம்

69 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் ஹைதராபாத் அணியை உள்ளூர் வீரர்கள் ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா மீட்டனர். அபிஷேக் சர்மா 24 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். ப்ரியம் கார்க் 26 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து மிரட்டினார்.

ஹைதராபாத் ஸ்கோர்

ஹைதராபாத் ஸ்கோர்

ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் சேர்த்தது. பெரிய விக்கெட்களை வீழ்த்திய சிஎஸ்கே அணி உள்ளூர் வீரர்களிடம் போட்டியை கோட்டை விட்டது. சிஎஸ்கே அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

சிஎஸ்கே அணி மீண்டும் ஒரு முறை மோசமான சேஸிங் செய்தது. வாட்சன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். பாப் டுபிளெசிஸ், ராயுடு அடுத்து நிதான ஆட்டம் ஆடி பின் வேகம் எடுத்த போது விக்கெட்டை இழந்தனர். ஜாதவ் 10 பந்துகளில் போராடி 3 ரன்கள் எடுத்தார்.

தோனி நிதான ஆட்டம்

தோனி நிதான ஆட்டம்

தோனி மீண்டும் பந்தை அடிக்க முடியாமல் நிதான ஆட்டம் ஆடினார். ஜடேஜா முதலில் நிதான ஆட்டம் ஆடினாலும் பின்னர் அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அதற்கு அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். தோனி அதன் பின் வேகம் எடுத்தாலும் தேவைப்படும் ரன் ரேட் 20க்கும் மேல் எகிறியது.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவை எனும் நிலையில் தோனி ஸ்ட்ரைக்கில் இருந்தார். அவரால் சரியாக பேட்டிங் செய முடியவில்லை. சோர்ந்து காணப்பட்டார். அந்த ஓவரில் சிஎஸ்கே 20 ரன்கள் எடுத்தாலும் அதில் பலனில்லாமல் போனது.

சிஎஸ்கே தோல்வி

சிஎஸ்கே தோல்வி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணி ஹைதராபாத் அணியிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது அந்த அணியின் மூன்றாவது தொடர் தோல்வி ஆகும்.

Story first published: Saturday, October 3, 2020, 15:33 [IST]
Other articles published on Oct 3, 2020
English summary
IPL 2020 News in Tamil : CSK vs SRH - Chennai Super Kings vs Sunrisers Hyderabad match updates and highlights.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+