For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏமாந்த பேர்ஸ்டோ.. எகிறிய ஸ்டம்ப்.. சந்தோஷத்தில் குதித்த தோனி.. அதிர வைத்த சிஎஸ்கேவின் பவர்பிளே கிங்!

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த போட்டிகளில் பவர்பிளே ஓவர்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில், கடந்த போட்டிகளில் சற்றே தடுமாறி வந்த அந்த அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரிலேயே அதிர வைத்தார்.

அவரது துல்லிய ஸ்விங் பந்துவீச்சில் ஜானி பேர்ஸ்டோ ஏமாந்து போய் விக்கெட்டை பறிகொடுத்தார்.

சென்னை - ஹைதராபாத் போட்டி

சென்னை - ஹைதராபாத் போட்டி

2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 14வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த சிஎஸ்கே, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது.

சிஎஸ்கே அணி மாற்றம்

சிஎஸ்கே அணி மாற்றம்

சிஎஸ்கே அணியில் கேப்டன் தோனி அதிரடி மாற்றங்களை செய்து இருந்தார். முரளி விஜய், ருதுராஜ் கெயிக்வாட், ஜோஷ் ஹேசல்வுட் நீக்கப்பட்டனர். அம்பதி ராயுடு, பிராவோ, ஷர்துல் தாக்குர் அணியில் சேர்க்கப்பட்டனர். சிஎஸ்கே அணி மொத்தமாக மாறி இருந்தது.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. சிஎஸ்கே அணி கடந்த இரண்டு போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாமல் தோல்வி அடைந்தது. அதனால், ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர், சிஎஸ்கே அணியின் பலவீனத்தை வைத்தே பேட்டிங் தேர்வு செய்ததாக கருதப்பட்டது.

எதற்கும் தயார்

எதற்கும் தயார்

அதே சமயம், சிஎஸ்கே அணி முந்தைய இரண்டு போட்டிகளை விட பலமான அணியுடன் இறங்கி உள்ளது. அதிலும் 11 பேருமே பேட்டிங்கில் ரன் குவிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். அதனால், சிஎஸ்கே அணி எதற்கும் தயாராகவே இந்தப் போட்டியில் களம் இறங்கியது.

தீபக் சாஹரின் முதல் ஓவர்

தீபக் சாஹரின் முதல் ஓவர்

வார்னர் - பேர்ஸ்டோ துவக்கம் அளித்தனர். தீபக் சாஹர் முதல் ஓவரை வீசினார். அவர் கடந்த போட்டிகளில் சரியாக பந்து வீசவில்லை. கடந்த ஆண்டுகளில் பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்தி சிஎஸ்கே அணிக்கு பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பார்.

ஏமாந்த பேர்ஸ்டோ

ஏமாந்த பேர்ஸ்டோ

அது போலவே அவர் மீண்டும் பந்து வீச வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில், தான் வீசிய முதல் ஓவரிலேயே நான்காவது பந்தில் பேர்ஸ்டோ விக்கெட்டை சாய்த்தார். அவர் வீசிய இன்ஸ்விங் பந்தில் ஏமாந்தார் பேர்ஸ்டோ.

குதித்த தோனி, வாட்சன்

குதித்த தோனி, வாட்சன்

பேர்ஸ்டோ டிரைவ் அடிக்க முயன்றார். ஆனால், ஸ்விங் ஆகும் என அவர் எதிர்பார்க்கவில்லை. அவரது ஆஃப் ஸ்டம்ப் எகிறியது. பௌல்டு அவுட் ஆனார் பேர்ஸ்டோ. அவர் அவுட் ஆன உடன் தோனி மற்றும் ஸ்லிப்பில் நின்று இருந்த ஷேன் வாட்சன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.

பவர்பிளே கிங்

பவர்பிளே கிங்

சிஎஸ்கே அணி பெரிய மாற்றத்தை எதிர்பார்த்து இருந்த நிலையில் அந்த அணியின் பவர்பிளே கிங் தீபக் சாஹர் பார்முக்கு திரும்பி உள்ளார். பவர்பிளே ஓவர்களில் அவர் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

Story first published: Friday, October 2, 2020, 21:15 [IST]
Other articles published on Oct 2, 2020
English summary
IPL 2020 News in Tamil : CSK vs SRH - Deepak Chahar back with his powerplay heroics
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+