Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேன் வில்லியம்சன் விக்கெட்டை காலி செய்த இளம் வீரர்.. போட்டியில் நடந்த பரபர சம்பவம்

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேன் வில்லியம்சன் ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இளம் வீரர் ப்ரியம் கார்க் வேடிக்கை பார்த்ததால் கேன் வில்லியம்சன் ரன் அவுட் ஆனதாக போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், இந்த ரன் அவுட்டில் கேன் வில்லியம்சன் மீதும் தவறு உள்ளது. இருந்தும் அவர் ப்ரியம் கார்க் மீது கடும் கோபம் கொண்டார்.

ஹைதராபாத் போட்டி

ஹைதராபாத் போட்டி

சென்னை சூப்பர் கிங்க்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே ஆன போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி சிஎஸ்கே அணியின் சிறப்பான பந்துவீச்சால் விக்கெட்களை இழந்து துவக்கத்தில் தடுமாறியது.

விக்கெட் சரிவு

விக்கெட் சரிவு

துவக்க வீரர் பேர்ஸ்டோ முதல் ஓவரில் டக் அவுட் ஆனார். மனிஷ் பாண்டே அதிரடி ஆட்டம் ஆடினாலும் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். வார்னர் நிதான ஆட்டம் ஆடி 28 ரன்களில் ஆட்டமிழந்தார். 69 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது ஹைதராபாத்.

கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன்

வார்னர் ஆட்டமிழந்த அடுத்த பந்தை சந்தித்தார் கேன் வில்லியம்சன். அவர் 9 ரன்கள் எடுத்து ஆடி வந்தார். எதிரில் ப்ரியம் கார்க் என்ற உள்ளூர் வீரர் நின்று இருந்தார். அவர் ஒரு பந்து கூட சந்திக்காத நிலையில் களத்தில் இருந்தார். பியுஷ் சாவ்லா வீசிய 11வது ஓவரின் கடைசி பந்தை சந்தித்தார் வில்லியம்சன்.

ரன் அவுட்

ரன் அவுட்

கேன் வில்லியம்சன் பந்தை ராயுடு நின்று இருந்த மிட் விக்கெட் திசையில் தட்டி விட்டார். ராயுடு பந்தை பிடிக்க ஓடி வந்த அதே நேரத்தில் கேன் வில்லியம்சன் ரன் ஓட முயன்றார். ஆனால், ப்ரியம் கார்க் பந்தை பார்த்துக் கொண்டே நின்று விட்டார். வில்லியம்சன் ரன் அவுட் ஆனார்.

கோபம் கொண்ட கேன்

கோபம் கொண்ட கேன்

ப்ரியம் கார்க் வேடிக்கை பார்த்துக் கொண்டே நின்றதால் ரன் அவுட் ஆனதாக கருதிய கேன் வில்லியம்சன் கடும் கோபம் கொண்டார். எப்போதுமே அமைதியின் உருவமான அவர், உள்ளூர் வீரர் மீது கோபம் கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தவறு யார் மீது?

தவறு யார் மீது?

கேன் வில்லியம்சன் ராயுடுவிடம் பந்தை அடித்து விட்டு அதை கவனிக்காமல் தான் ரன் ஓடினார். ஆனால், உஷாராக பந்து ராயுடு வசம் செல்வதை கண்ட ப்ரியம் கார்க் ரன் ஓடாமல் தன் விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டார். கேன் வில்லியம்சன் அவசரப்பட்டு ரன் ஓடி தன் விக்கெட்டை பறி கொடுத்தார் என்பதே உண்மை.

ஹைதராபாத் ஸ்கோர்

ஹைதராபாத் ஸ்கோர்

முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்த போதும் ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா 31, ப்ரியம் கார்க் 51 ரன்கள் சேர்த்து கை கொடுத்தனர். அந்த அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கே அணிக்கு 165 ரன்கள் என்பது சவாலான இலக்காகவே இருந்தது.

Story first published: Saturday, October 3, 2020, 19:54 [IST]
Other articles published on Oct 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+