Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த வீரரை மீண்டும் இறக்கிய தோனி.. சிஎஸ்கேவில் அதிரடி மாற்றம்.. டாஸில் தோற்ற டெல்லி!

ஷார்ஜா : 2௦20 ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி டாஸ் வென்றார். அவர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டது. எந்த வீரர் மோசமாக ஆடி இரு போட்டிகளுக்கு முன் நீக்கப்பட்டாரோ அதே வீரரை மீண்டும் அணியில் சேர்த்தார் தோனி.

டெல்லி - சிஎஸ்கே போட்டி

டெல்லி - சிஎஸ்கே போட்டி

டெல்லி கேபிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய லீக் சுற்றின் 34வது போட்டி ஷார்ஜாவின் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. டெல்லி அணி முதலில் பந்து வீசியது.

ஷார்ஜா மைதானம்

ஷார்ஜா மைதானம்

இந்தப் போட்டி நடந்த ஷார்ஜா மைதானம் சிறிய பவுண்டரி எல்லைகளை கொண்டது என்பதால் அதிக சிக்ஸர்கள் செல்லும். இந்த நிலையில், முதலில் பேட்டிங் செய்யும் சிஎஸ்கே அணி 200 ரன்களை குறி வைத்து பேட்டிங் தேர்வு செய்தது.

சிஎஸ்கே மாற்றம்

சிஎஸ்கே மாற்றம்

சிஎஸ்கே அணியில் பியுஷ் சாவ்லா நீக்கப்பட்டு, கேதார் ஜாதவ் மீண்டும் அணியில் இடம் பெற்றார். அவர் மோசமான பார்ம் காரணமாக இரண்டு போட்டிகளுக்கு முன் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். ஆனால், தற்போது அவர் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

டெல்லி நிலை

டெல்லி நிலை

டெல்லி கேபிடல்ஸ் அணி எட்டு போட்டிகளில் ஆடி ஆறு வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி இந்தப் போட்டியில் தோற்றால் பிளே-ஆஃப் வாய்ப்பு கடினமாக மாறும் என்பதால், டெல்லி அணி வெற்றி பெற கடுமையாக முயற்சி செய்யும். டெல்லி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - பாப் டுபிளெசிஸ், ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, தோனி, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், டிவைன் பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், கரன் சர்மா

டெல்லி அணி

டெல்லி அணி

டெல்லி கேபிடல்ஸ் அணி - ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், அஜின்க்யா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், அலெக்ஸ் கேரி, அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், துஷார் தேஷ்பாண்டே, காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ஜே

Story first published: Saturday, October 17, 2020, 19:49 [IST]
Other articles published on Oct 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+