Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிராவோ எங்கே? கடைசி ஓவரில் பரபரப்பு.. சிஎஸ்கேவில் நடந்த மெகா சொதப்பல்.. கதையை முடித்த தவான்!

ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் பந்துவீச்சில் கடைசி ஓவருக்கு முன்பு வரை போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தது.

கடைசி ஓவரை பிராவோவை வீசச் செய்யாமல் ஜடேஜாவிடம் அளித்தார் தோனி. அது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

டாஸ் வென்ற தோனி

டாஸ் வென்ற தோனி

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்றார். அவர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். சிஎஸ்கே அணியின் புதிய துவக்க வீரர் சாம் கர்ரன் மூன்றாவது பந்திலேயே டக் அவுட் ஆனார்.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

அதன் பின் வாட்சன் - டுபிளெசிஸ் நிதான ஆட்டம் ஆடி ரன் சேர்த்தனர். டுபிளெசிஸ் 58 ரன்கள் எடுத்தார். வாட்சன் 36 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த தோனி 5 பந்துகளில் வெறும் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

அதிரடி கூட்டணி

அதிரடி கூட்டணி

அம்பதி ராயுடு அதிரடி ஆட்டம் ஆடி வந்த நிலையில், அவருடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா அதிரடி ஆட்டம் ஆடினார். இருவரும் கடைசி நான்கு ஓவர்களில் சிக்ஸ் மழை பொழிந்தனர். அம்பதி ராயுடு 25 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். அவர் 4 சிக்ஸ் அடித்திருந்தார்.

சிஎஸ்கே ஸ்கோர்

சிஎஸ்கே ஸ்கோர்

ஜடேஜா 13 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார். அவரும் 4 சிக்ஸ் அடித்திருந்தார். சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. இது டெல்லி அணிக்கு சவாலான இலக்காகவே கருதப்பட்டது.

டெல்லி சேஸிங்

டெல்லி சேஸிங்

டெல்லி அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷா முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த ரஹானே 8 ரன்கள் எடுத்து தன் வேலையை முடித்துக் கொண்டு கிளம்பினார். துவக்க வீரர் தவான் பொறுப்பாக நங்கூரமிட்டு ஆடினார்.

தூணாக நின்ற தவான்

தூணாக நின்ற தவான்

ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக ஆடி 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட்கள் சரிந்தாலும்தவான் மட்டும் அதிரடியாக ரன் குவித்து வந்தார். ஸ்டோய்னிஸ் 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். கடைசி 4 ஓவர்களில் 41 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது டெல்லி.

சிஎஸ்கே கையில் போட்டி

சிஎஸ்கே கையில் போட்டி

அலெக்ஸ் கேரி, தவானுக்கு ஸ்ட்ரைக் கொடுத்து ஆடினார். கடைசி 2 ஓவர்களில் 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அலெக்ஸ் கேரி 19வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் டெல்லி 4 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அப்போது அனுபவ வீரர் பிராவோ பந்து வீசுவார் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாந்து போனார்கள். ஜடேஜாவிடம் பந்தை கொடுத்தார் தோனி. கடைசி ஓவரில் அக்சர் பட்டேல் 3 சிக்ஸ் அடித்தார்.

டெல்லி வெற்றி

டெல்லி வெற்றி

அக்சர் பட்டேல் அனாயசமாக சிக்ஸர்கள் அடிக்க டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய ஷிகர் தவான் சதம் கடந்தார். இதுவே அவரது முதல் டி20 சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிராவோ எங்கே?

பிராவோ எங்கே?

கடைசி ஓவரில் ஏன் பிராவோ வீசவில்லை என்பதே அனைவரின் கேள்வியாக மாறியது. பிராவோ உடல்நிலை சரியில்லை என மைதானத்தை விட்டு வெளியேறியதாகவும், அவர் கடைசி ஓவர் வரை வரவில்லை என்பதால் வேறு வழியின்றி ஜடேஜா பந்து வீசியதாகவும் தெரிய வந்தது.

Story first published: Saturday, October 17, 2020, 23:51 [IST]
Other articles published on Oct 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+