Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்ட திட்டமெல்லாம் வேஸ்ட்.. தோனி நம்பிய வீரர்.. முதல் ஓவரிலேயே சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி!

ஷார்ஜா : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய திட்டத்துடன் களமிறங்கி கடந்த போட்டியில் வென்ற நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அப்படியே தலைகீழாக நடந்தது.

துவக்க வீரராக சாம் கர்ரன் அடித்து ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் முதல் ஓவரிலேயே அதிர்ச்சி அளித்தார்.

இதையடுத்து சிஎஸ்கே அணி பழைய பாணிக்கு மாறி பேட்டிங்கில் சொதப்பியது.

சிஎஸ்கே பேட்டிங் வரிசை

சிஎஸ்கே பேட்டிங் வரிசை

சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை கடந்த ஹைதராபாத் போட்டியில் இருந்து மாறியது. அந்தப் போட்டியில் இளம் வீரர் சாம் கர்ரன் துவக்க வீரராக பேட்டிங் செய்தார். அவர் துவக்கத்தில் அதிரடியாக ரன் குவித்தால் சிஎஸ்கே அணி எளிதாக அதிக ரன் ரேட்டுக்கு முன்னேறும் என கருதப்பட்டது.

சாம் கர்ரன் டக் அவுட்

சாம் கர்ரன் டக் அவுட்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சாம் கர்ரன் மீண்டும் துவக்கம் அளித்தார். துஷார் தேஷ்பாண்டே வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் அவர் அன்ரிச் நோர்ஜேவிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார்.

டுபிளெசிஸ் - வாட்சன்

டுபிளெசிஸ் - வாட்சன்

ரன் எடுக்கும் முன்பே முதல் விக்கெட்டை இழந்தது சிஎஸ்கே. மீண்டும் பழைய பாணியில் பாப் டுபிளெசிஸ் - ஷேன் வாட்சன் இணைந்து துவக்கம் அளிப்பது போல ஆடத் துவங்கினர். டுபிளெசிஸ் 58 ரன்கள் சேர்த்தார். ஷேன் வாட்சன் 36 ரன்கள் எடுத்தார். இருவரும் 120 ஸ்ட்ரைக் ரேட்டில் தான் ரன் குவித்தனர்.

தோனி ஏமாற்றம்

தோனி ஏமாற்றம்

அடுத்து ராயுடுவுடன் ஜோடி சேர்ந்த தோனி 5 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். தோனி கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடுவார் என எதிர்பார்த்த அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ராயுடு அதிரடி

ராயுடு அதிரடி

எனினும், அம்பதி ராயுடு தொடர்ந்து அதிரடியாக ரன் சேர்த்தார். ஜடேஜாவும் கடைசி நேரத்தில் அதிரடியாக ரன் சேர்த்தார். ஜடேஜா 13 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். ராயுடு 25 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார்.

மாறிய திட்டம்

மாறிய திட்டம்

போட்டி நடந்த ஷார்ஜா மைதானத்தில் 200 ரன்கள் எடுத்தால் கூட வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை எனும் நிலையில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 179 ரன்கள் குவித்தது. ஆடுகளம் மந்தமாக இருப்பதால் டெல்லி அணி விரைவாக விக்கெட்களை இழந்தால் சிஎஸ்கே வெற்றிக்கு வாய்ப்பு இருப்பதாக விமர்சகர்கள் கூறினர்.

சாம் கர்ரன் செய்த சொதப்பல்

சாம் கர்ரன் செய்த சொதப்பல்

சிஎஸ்கே அணி கடைசி நேரத்தில் பேட்டிங்கில் தடுமாற முக்கிய காரணம் சாம் கர்ரன் டக் அவுட் அனது தான். அதே சமயம், ஒரு இளம் வீரரை நம்பி சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டர் உள்ளது என்பதும் மோசமான விஷயமாக அமைந்தது.

Story first published: Saturday, October 17, 2020, 21:40 [IST]
Other articles published on Oct 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+