For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பவுண்டரி மழை.. டெல்லி அணியின் சரமாரி தாக்குதல்.. நொந்து நூடுல்ஸ் ஆகி தோற்ற கொல்கத்தா!

ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் 16 வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 228 ரன்கள் குவித்தது.

கொல்கத்தா அணி போராடினாலும் இடையே வரிசையாக முக்கிய விக்கெட்கள் சரிந்ததால் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

16வது லீக் போட்டி

16வது லீக் போட்டி

2020 ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்தித்தன. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணி 200 ரன்கள் குவிக்க வேண்டும் என்ற நோக்குடன் களமிறங்கியது.

அதிரடி துவக்கம்

அதிரடி துவக்கம்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ப்ரித்வி ஷா - ஷிகர் தவான் அதிரடி துவக்கம் அளித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.5 ஓவரில் 56 ரன்கள் குவித்தது. தவான் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் - ப்ரித்வி ஷாவுடன் இணைந்து ஆடினார்.

ப்ரித்வி ஷா அதிரடி

ப்ரித்வி ஷா அதிரடி

ப்ரித்வி ஷா அதிரடி ஆட்டம் ஆடி வந்தார். 41 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார் அவர். 4 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து மிரட்டினார் ப்ரித்வி ஷா. மறுபுறம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுண்டரி மழை பொழிந்து வந்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர்

ஸ்ரேயாஸ் ஐயர்

ரிஷப் பண்ட் 17 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி வரை களத்தில் நின்று 38 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் ஹெட்மயர் முழுமையாக ஆடியதால் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.

கொல்கத்தா பந்துவீச்சு பரிதாபம்

கொல்கத்தா பந்துவீச்சு பரிதாபம்

கொல்கத்தா அணியில் நான்கு பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 12 ரன்களுக்கும் மேல் வாரி இறைத்தனர். கம்மின்ஸ், சுனில் நரைன் என சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்களும் இதில் விதிவிலக்கல்ல. ஆண்ட்ரே ரஸ்ஸல் மட்டுமே சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

டெல்லி ஸ்கோர்

டெல்லி ஸ்கோர்

டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது. டெல்லி அணி திட்டமிட்டபடி 200 ரன்களை கடந்தது. ஷார்ஜா மைதானத்தில் 200 ரன்களுக்கு மேல் எளிதாக குவிக்கலாம் என்பதால் கொல்கத்தா அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது.

சொதப்பல்

சொதப்பல்

கொல்கத்தா அணிக்கு மீண்டும் மோசமான் துவக்கம் அளித்தார் சுனில் நரைன். அவர் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஷுப்மன் கில் பெரிய இன்னிங்க்ஸ் ஆடுவது போல நிறைய பந்துகளை எடுத்துக் கொண்டார். ஆனால், 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

நிதிஷ் ராணா அதிரடி ஆட்டம் ஆடி 35 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். ஆண்ட்ரே ரஸ்ஸல் 13, தினேஷ் கார்த்திக் 6 ரன்களில் ஆட்டமிழந்த போது கொல்கத்தா அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி ஆனது. ஆனால், களத்தில் இயான் மார்கன் இருந்தார்.

வெற்றிக்கு முயற்சி

வெற்றிக்கு முயற்சி

ராகுல் திரிபாதிக்கு முன் பாட் கம்மின்ஸ் அனுப்பப்பட்டார். அவர் வெறும் 5 ரன்கள் தான் எடுத்தார். பின் திரிபாதி - மார்கன் இணைந்து எட்ட முடியாத இலக்கை எட்ட முயற்சி செய்தனர். திரிபாதி 16 பந்துகளில் 36, மார்கன் 18 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தனர். எனினும், அவர்கள் விக்கெட்கள் பறிபோனதை அடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் டெல்லி அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

Story first published: Sunday, October 4, 2020, 0:28 [IST]
Other articles published on Oct 4, 2020
English summary
IPL 2020 News in Tamil : DC vs KKR - Delhi Capitals vs Kolkata Knight Riders 16th match updates
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+