Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த சின்னப் பையனுக்காக கிறிஸ் கெயிலை தூக்குவீங்களா? விளாசிய ரசிகர்கள்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் இடம் பெறவில்லை.

அவரை நீக்கியது ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தை உண்டாக்கியது. இணையத்தில் ரசிகர்கள் கெயில் நீக்கத்தை பற்றி தங்கள் கருத்துக்களை பகிரத் தொடங்கியதால் போட்டியை விட கிறிஸ் கெயில் நீக்கம் பற்றியே அதிகமாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.

இரண்டாவது போட்டி

இரண்டாவது போட்டி

2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டாவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கான அணியை அறிவித்த போது பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில் இடம்பெறவில்லை.

நிக்கோலஸ் பூரன்

நிக்கோலஸ் பூரன்

டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர், அதிக ரன்கள் அடித்து மிரட்டி உள்ள கிறிஸ் கெயிலுக்கு பஞ்சாப் அணியில் இடம் அளிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே சமயம், கிறிஸ் கெயில் ஜூனியர் என கூறப்படும் இளம் அதிரடி வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அணியில் இடம் பெற்று இருந்தார்.

வறுத்து எடுத்த ரசிகர்கள்

வறுத்து எடுத்த ரசிகர்கள்

சின்னப் பையன் நிக்கோலஸ் பூரனுக்காக, கிறிஸ் கெயிலை நீக்கி விட்டீர்களே என பஞ்சாப் அணியை வறுத்து எடுத்தனர் ரசிகர்கள். மறுபுறம் டெல்லி அணியில் இந்திய அணி வீரர் அஜின்க்யா ரஹானே சேர்க்கப்படவில்லை.

கேப்டன்சி சரியில்லை

கேப்டன்சி சரியில்லை

ரஹானே நீக்கம் ரசிகர்களை பெரிதாக பாதிக்கவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக இருந்த அவர், கேப்டனாக இரண்டு சீசன்களில் செயல்பட்டார். எனினும், அவரது கேப்டன்சி சரியில்லை என கடந்த சீசனில் பாதியில் அவர் நீக்கப்பட்டார்.

ரஹானே அணி மாற்றம்

ரஹானே அணி மாற்றம்

அதை அடுத்து அவர் இந்த சீசனில் அணி மாறி, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு வந்தார். இந்த அணியில் அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதையும் சிலர் கிண்டல் செய்து வருகின்றனர். பஞ்சாப் அணியில் இருந்து டெல்லி அணிக்கு தாவிய அஸ்வின் முதல் போட்டியில் இடம் பெற்றுள்ளார்.

அஸ்வின்

அஸ்வின்

தான் கேப்டனாக இருந்த பஞ்சாப் அணிக்கு எதிராக அஸ்வின் முதல் போட்டியில் ஆடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஹானே போலவே அஸ்வின் கேப்டன்சியில் அதிருப்தி அடைந்து அவரை அணி மாற்றியது பஞ்சாப் அணி.

கேஎல் ராகுல்

கேஎல் ராகுல்

பஞ்சாப் அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் கேப்டனாக தன் முதல் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணி பேட்டிங்கில் தடுமாறியது. அந்த வகையில் தான் எடுத்த முதல் முடிவிலும் வெற்றி பெற்றுள்ளார் கேஎல் ராகுல்.

Story first published: Sunday, September 20, 2020, 21:43 [IST]
Other articles published on Sep 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+