Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னையா டீமை விட்டு எடுத்தீங்க? ஆஸி. வீரர் வெறியாட்டம்.. கோலிக்கு சம்மட்டி அடி.. இது எப்படி இருக்கு?

துபாய் : விராட் கோலி கேப்டனாக முன்பு எடுத்த முடிவுகள் தவறு என நிரூபிக்கும் களமாக 2020 ஐபிஎல் தொடர் மாறி உள்ளது.

முதல் போட்டியில் இந்திய அணியில் இருந்து சரியான காரணமே இல்லாமல் நீக்கப்பட்ட அம்பதி ராயுடு, விராட் கோலிக்கு தன் பேட் மூலம் பதில் அளித்தார்.

இரண்டாவது போட்டியில் பெங்களூர் அணியில் இருந்து நீக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் மார்க்ஸ் ஸ்டோனிஸ் பதிலடி கொடுத்து இருக்கிறார்.

முதல் போட்டி

முதல் போட்டி

டெல்லி கேபிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே ஆன ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி விக்கெட் வீழ்ச்சியால் திணறி வந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 39, பண்ட் 31 ரன்கள் குவித்தனர்.

பஞ்சாப் ஏமாற்றம்

பஞ்சாப் ஏமாற்றம்

எனினும், அந்த அணி 17 ஓவர்களில் 100 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. எப்படியும் 130 - 140 ரன்களுக்குள் சுருண்டு விடும் என கருதியது பஞ்சாப் அணி. அப்போது களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக ஆடி 7 ஃபோர், 3 சிக்ஸ் அடித்தார்.

அதிரடி

அதிரடி

21 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார் அவர். கடைசி 3 ஓவர்களில் மட்டும் அவர் 49 ரன்கள் எடுத்திருந்தார். டெல்லி அணி 20 ஓவர்களில் 157 ரன்கள் குவித்தது. அடுத்து பஞ்சாப் அணியின் பேட்டிங்கின் போது கடைசி ஓவரை வீசினார் ஸ்டோனிஸ்

கடைசி ஓவர் வீசிய ஸ்டோனிஸ்

கடைசி ஓவர் வீசிய ஸ்டோனிஸ்

கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 13 ரன்கள் தேவை எனும் நிலையில, மார்கஸ் ஸ்டோனிஸ் பந்து வீசினார். முதல் மூன்று பந்துகளிலேயே 12 ரன்கள் கொடுத்து விட்டார். எனினும், கடைசி மூன்று பந்துகளில் ஒரு ரன் கூட கொடுக்காமல், கடைசி இரண்டு பந்துகளில் 2 விக்கெட் சாய்த்தார்.

டெல்லி அணி வெற்றி

டெல்லி அணி வெற்றி

போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது. தன் அணியை பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாகசெயல்பட்டு காப்பற்றினார் ஸ்டோனிஸ். அவரது சிறப்பான செயல்பாட்டை வைத்து பெங்களூர் அணியை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

நீக்கப்படும் வீரர்கள்

நீக்கப்படும் வீரர்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து நீக்கப்படும் வீரர்கள் வேறு அணியில் சிறப்பாக செயல்படுவார்கள் என கூறப்படுவதுண்டு. ஷேன் வாட்சன் அதற்கு ஒரு நல்ல உதாரணம். அதே போல தற்போது ஸ்டோனிஸ், விராட் கோலியை கேள்வி கேட்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டதாக ரசிகர்கள் பெங்களூர் அணியை கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Monday, September 21, 2020, 11:52 [IST]
Other articles published on Sep 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+