
இரண்டாவது லீக் போட்டி
2020 ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதிர்ச்சி
டெல்லி அணியின் ப்ரித்வி ஷா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். தவான் டக் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ஹெட்மயர் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். விக்கெட் சரிந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 39, ரிஷப் பண்ட் 31 ரன்கள் எடுத்தனர்.

அதிரடி
17 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 100 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. பஞ்சாப் அணி அதுவரை ஆதிக்கம் செலுத்தி இருந்தது. அதன் பின் மார்கஸ் ஸ்டோனிஸ் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை விளாசித் தள்ளினார். 18வது ஓவரில் 1 சிக்ஸ், 1 ஃபோர் அடித்தார்.

கடைசி ஓவர்
அதன் பின் 19வது ஓவரில் 3 ஃபோர் அடித்தார். கடைசி ஓவரில் எப்படியாவது அணியை கரை சேர்க்க வேண்டும் என்ற முடிவில் தாண்டவம் ஆடினார். 2 சிக்ஸ், 3 ஃபோர் அடித்த அவர் கடைசி பந்து நோ பாலாக வீசப்பட்டது தெரியாமல், அணிக்காக இரண்டு ரன்கள் ஓடி ரன் அவுட் ஆனார்.

மிரள வைத்தார்
கடைசி ஓவரில் மட்டும் டெல்லி அணி 30 ரன்கள் எடுத்தது. ஸ்டோனிஸ் 21 பந்துகளில் 53 ரன்கள் குவித்து மிரட்டினார். அவர் கடைசி 3 ஓவர்களில் மட்டுமே 49 ரன்கள் குவித்து மிரள வைத்தார். குறைந்த ஸ்கோர் எடுக்கும் என நினைத்த டெல்லி அணி, 157 ரன்கள் குவித்தது.

அழுத்தம்
அதன் பின் ஆடிய டெல்லி அணி விக்கெட்களை இழந்து தடுமாறியது. அந்த அணிக்கு அழுத்தம் கொடுத்தது ஸ்டோனிஸ்-இன் அதிரடி ஆட்டம் தான். அவர் கடந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஆடியவர். அந்த அணி அவரை வேண்டாம் என நீக்கிய நிலையில், டெல்லி அணியில் அவர் இந்த அதிரடி ஆட்டத்தை ஆடி உள்ளார்.

கிறிஸ் ஜோர்டான்
கடைசி ஓவரை வீசிய கிறிஸ் ஜோர்டான் நிலை தான் பாவம். அவர் 4 ஓவர்களில் 56 ரன்கள் கொடுத்து பரிதாபமாக காட்சி அளித்தார். முதல் மூன்று ஓவர்களில் அவர் 26 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications