Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வயசான அனுபவ வீரர்கள்.. ஆர்சிபியை காலி செய்த டெல்லி.. செம ட்விஸ்ட்.. தோற்றாலும் கோலி ஹேப்பி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று, பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

பெங்களூர் அணி இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தாலும் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது.

பிளே-ஆஃப் மோதல்

பிளே-ஆஃப் மோதல்

பிளே-ஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே முன்னேறி இருந்த நிலையில், அடுத்த மூன்று இடங்களுக்கு நான்கு அணிகள் போட்டி போட்டு வந்தன. அதில் டெல்லி கேபிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதிய போட்டியில் வெல்லும் அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடிக்கும் நிலை இருந்தது.

பெங்களூர் அணி பேட்டிங்

பெங்களூர் அணி பேட்டிங்

இந்த நிலையில், பெங்களூர் அணி இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடியது. 180 ரன்களுக்கு மேல் எடுத்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் ஆடிய பெங்களூர் அணி மந்தமாக ரன் எடுத்து வந்தது. தேவ்தத் படிக்கல் 41 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.

குறைந்த ஸ்கோர்

குறைந்த ஸ்கோர்

ஏபி டிவில்லியர்ஸ் 21 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார். துபே 17 ரன்கள் எடுத்தார். பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்தது. இது குறைந்த ஸ்கோர் என்பதால் பெங்களூர் அணியின் வெற்றி வாய்ப்பு குறைவாகவே இருந்தது.

பிளே-ஆஃப் செல்ல வேண்டும்

பிளே-ஆஃப் செல்ல வேண்டும்

மேலும், டெல்லி கேபிடல்ஸ் அணி பிளே-ஆஃப் செல்ல வேண்டும் என்றால் 134 ரன்கள் எடுக்க வேண்டும். அதே போல, பெங்களூர் அணி பிளே-ஆஃப் செல்ல வேண்டும் என்றால் 17.3 ஓவர்கள் வரை டெல்லி அணியை இலக்கை எட்ட விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

டெல்லி அணி ட்விஸ்ட்

டெல்லி அணி ட்விஸ்ட்

வெற்றி பெற்றால் இன்னும் எளிதாக பிளே-ஆஃப் வாய்ப் உறுதி செய்யலாம் எனும் நிலையில் டெல்லி அணி வெற்றியை நோக்கி ஆடியது. இந்தப் போட்டியில் டெல்லி அணியின் இளம் வீரர்களை ஓரங்கட்டி விட்டு மூத்த வீரர்கள் ஷிகர் தவான் - அஜின்க்யா ரஹானே போட்டியை தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர்.

டெல்லி வெற்றி

டெல்லி வெற்றி

ப்ரித்வி ஷா 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், தவான் 54, ரஹானே 60 ரன்கள் எடுத்து சேஸிங்கை எளிதாக மாற்றினர். இருவரும் 130+ ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியதும் குறிப்பிடத்தக்கது. டெல்லி அணி 19 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

கோலி மகிழ்ச்சி

கோலி மகிழ்ச்சி

டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே சமயம், டெல்லி அணியை 17.3 ஓவர்களுக்குள் இலக்கை எட்ட விடாமல் பார்த்துக் கொண்ட பெங்களூர் அணியும் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஒரே போட்டியில் இரண்டு அணிகளும் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

Story first published: Tuesday, November 3, 2020, 0:15 [IST]
Other articles published on Nov 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+