Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

DC vs RCB : டெல்லி கொடுத்த முதல் அடி.. அதிர்ந்து போன கோலி.. என்ன நடந்தது?

அபுதாபி : டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸில் தோல்வி அடைந்தது.

ஜெயித்தே ஆக வேண்டிய போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று சாதகமான முடிவை எடுத்தது.

போட்டி துவங்கும் முன்பே டாஸில் முதல் அடியை வாங்கியது பெங்களூர் அணி. கேப்டன் விராட் கோலி பேசும் போது இது பற்றி குறிப்பிட்டார்.

ஜெயிக்க வேண்டிய போட்டி

ஜெயிக்க வேண்டிய போட்டி

2020 ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சுற்றில் இடம் பெறப் போகும் அணியை முடிவு செய்ய உள்ளது டெல்லி கேபிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே ஆன போட்டி. இந்தப் போட்டியில் தோல்வி அடையும் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கும்.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

இந்த நிலையில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்றது. அந்த அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கடந்த சில லீக் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யும் அணி தோல்வி அடைந்து வரும் நிலையில், இது டெல்லி அணிக்கு சாதகமான முடிவாக இருந்தது.

பெங்களூர் அணிக்கு அடி

பெங்களூர் அணிக்கு அடி

பெங்களூர் அணி வெற்றி அவசியம் என்ற நிலையில் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. அந்த அணி கடந்த மூன்று சீசன்களில் பிளே-ஆஃப் முன்னேறாத நிலையில் இந்த சீசனிலும் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தால் கடும் விமர்சனத்தை சந்திக்கும்.

அணி மாற்றம்

அணி மாற்றம்

விராட் கோலி டாஸ் நிகழ்வின் போது பேசுகையில் தாங்களும் முதலில் பந்து வீசவே விரும்பியதாக கூறினார். பெங்களூர் அணியில் சிவம் துபே, ஷாபாஸ் அஹ்மது சேர்க்கப்பட்டனர். குர்கீரத் மான், நவ்தீப் சைனி நீக்கப்பட்டனர். டெல்லி அணியில் அக்சர் பட்டேல், அஜின்க்யா ரஹானே, டேனியல் சாம்ஸ் அணியில் சேர்க்கப்பட்டனர்.

Story first published: Monday, November 2, 2020, 19:48 [IST]
Other articles published on Nov 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+