Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீமை காப்பாற்றிய இளம் வீரர்.. அதிரடியில் தெறிக்கவிட்ட ஏபிடி.. தவிக்க விட்ட அஸ்வின்!

அபுதாபி : டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 152 ரன்கள் எடுத்தது.

இந்தப் போட்டியில் தேவ்தத் படிக்கல் அரைசதம் அடித்தார். ஏபி டிவில்லியர்ஸ் மீண்டும் தன் அதிரடி ஆட்டத்தால் பெங்களூர் அணியை காப்பாற்றினார்.

டாஸ் வென்ற டெல்லி

டாஸ் வென்ற டெல்லி

இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெறுவது கடினம் என கூறப்பட்ட நிலையில், இது பெங்களூர் அணிக்கு பின்னடைவாக கருதப்பட்டது.

பெங்களூர் பேட்டிங்

பெங்களூர் பேட்டிங்

பெங்களூர் அணியில் துவக்க வீரர் ஜோஷ் பிலிப் 12 ரன்கள் மட்டுமே சேர்த்தார். தேவ்தத் படிக்கல் 41 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். விராட் கோலி 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிறிஸ் மோரிஸ் டக் அவுட் ஆனார்.

டிவில்லியர்ஸ்

டிவில்லியர்ஸ்

ஏபி டிவில்லியர்ஸ் இந்தப் போட்டியில் அதிரடியாக ஆடி 21 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். மீண்டும் ஒரு முறை அணியை காப்பாற்ற போராடினார். அவரது ஆட்டத்தால் கடைசி ஓவர்களில் ரன் வேகம் அதிகரித்தது. உடானா 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஸ்கோர்

ஸ்கோர்

பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்தது. இது அபுதாபி மைதானத்தில் குறைந்த ஸ்கோர்தான். டெல்லி அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. டேனியல் சாம்ஸ் மட்டுமே அதிக ரன்கள் வாரி இறைத்தார். 4 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்தார் அவர்.

அஸ்வின் பந்துவீச்சு

அஸ்வின் பந்துவீச்சு

அஸ்வின் கட்டுக்கோப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அன்ரிச் நோர்ஜே 3 விக்கெட் வீழ்த்தினார். ரபாடா 2 விக்கெட் சாய்த்தார்.

Story first published: Monday, November 2, 2020, 21:56 [IST]
Other articles published on Nov 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+