Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தம்பி முடியலை.. இத்தோட நிறுத்திக்குவோம்.. டெஸ்ட் மேட்ச் ஆடிய வீரர்.. வீட்டுக்கு அனுப்பிய கோலி

அபுதாபி : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் உள்ளூர் வீரரான குர்கீரத் சிங் மான் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஆடிய ஆட்டம் காரணமாகவே அவர் நீக்கப்பட்டுள்ளார்.

வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் பெங்களூர் அணி ஆடிய நிலையில், இந்த முடிவை எடுத்தார் விராட் கோலி.

பெங்களூர் அணி நிலை

பெங்களூர் அணி நிலை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2020 ஐபிஎல் தொடரில் துவக்கத்தில் பிளே-ஆஃப் செல்லும் அணியில் முதன்மையான அணியாக கருதப்பட்டது. ஆனால், கடைசி சில போட்டிகளில் அந்த அணி தோல்விகளை சந்தித்து பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை கடினமானதாக மாற்றிக் கொண்டது.

அணி மாற்றம்

அணி மாற்றம்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வென்றால் மட்டுமே பிளே-ஆஃப் வாய்ப்பு உறுதியாகும் என்ற நிலையில் களமிறங்கியது. அந்தப் போட்டியில் அணியில் முக்கிய மாற்றம் செய்தார் விராட் கோலி. குர்கீரத் சிங் மான், நவ்தீப் சைனி அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

காரணம்

காரணம்

ஆல் - ரவுண்டர் சிவம் துபே, ஷாபாஸ் அஹ்மது அணியில் சேர்க்கப்பட்டனர். நவ்தீப் சைனி காயம் அடைந்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், குர்கீரத் சிங் மான் மோசமான ஆட்டத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

குர்கீரத் சிங் ஆட்டம்

குர்கீரத் சிங் ஆட்டம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி பேட்டிங்கில் தடுமாறியது. அந்தப் போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், குர்கீரத் சிங் மான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

மோசமான செயல்பாடு

மோசமான செயல்பாடு

ஆனால், அவர் டெஸ்ட் போட்டி போல கடைசி ஓவர் வரை அதிரடி ஆட்டம் ஆட முயலாமல் தன் விக்கெட்டை தற்காத்து ஆடினார். 24 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடைசி ஓவர்களில் கூட விரைவாக ரன் சேர்க்க அவர் முயற்சி செய்யாதது விமர்சனத்தை சந்தித்தது.

விராட் கோலி முடிவு

விராட் கோலி முடிவு

இந்த நிலையில், பெங்களூர் அணியில் இருந்து அவரை நீக்கினார் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி. டெல்லி கேபிடல்ஸ் போட்டியில் அவர் நீக்கப்பட்டார். அவர் இந்த சீசனில் 8 போட்டிகளில் 80 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 88.75 மட்டுமே.

Story first published: Monday, November 2, 2020, 21:07 [IST]
Other articles published on Nov 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+