Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யப்பா சாமி முடியலை!! வேலையைக் காட்டிய ரஹானே.. மொத்தமாக தலையில் துண்டை போட்டுக் கொண்ட டெல்லி டீம்!

துபாய் : டெல்லி கேபிடல்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடருக்கு முன் போராடி பேரம் பேசி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து அஜின்க்யா ரஹானேவை தங்கள் அணிக்கு மாற்றிக் கொண்டது.

இந்த சீசனில் இரண்டு போட்டிகளில் ரஹானே களமிறங்கினார். அவரை ஏன் கஷ்டப்பட்டு தங்கள் அணிக்கு மாற்றினோம் என டெல்லி அணி நினைக்கும் அளவுக்கு அந்த இரண்டு போட்டிகளிலும் வெறுப்பேற்றி இருக்கிறார் ரஹானே.

கேப்டனாக இருந்த ரஹானே

கேப்டனாக இருந்த ரஹானே

அஜின்க்யா ரஹானே 2௦18 மற்றும் 2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். 2019 ஐபிஎல்-இல் பாதி தொடரில் ராஜஸ்தான் அணியின் தோல்விகளை சுட்டிக் காட்டிகேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதிருப்தி

அதிருப்தி

பாதி தொடரில் கேப்டன் பதவியை பறித்ததால் கடும் அதிருப்தியில் இருந்தார் ரஹானே. அதே சீசனில் சில போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடி தன் அணி நிர்வாகம் மீது இருந்த கோபத்தை வெளிப்படுத்தினார். அந்த சீசனின் முடிவில் ராஜஸ்தான் அணியை விட்டு விலகும் முடிவில் இருந்தார் அவர்.

கங்குலி அழைப்பு

கங்குலி அழைப்பு

அந்த நேரத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த சவுரவ் கங்குலி, ரஹானேவை டெல்லி அணியில் சேர்க்க அழைப்பு விடுத்தார். ரஹானே அதை ஏற்றுக் கொண்டார். டெல்லி அணி, ராஜஸ்தான் அணியிடம் பேரம் பேசி ஒரு வழியாக ரஹானேவை தங்கள் அணிக்கு மாற்றிக் கொண்டது.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

இப்படி போராடி ரஹானேவை அணியில் சேர்த்த டெல்லி, 2020 ஐபிஎல் சீசனில் முதல் சில போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. சிலர் ரஹானே வீணாக அமர்ந்து இருப்பதாகவும், அவருக்கு வாய்ப்பு அளிக்காமல் இருப்பது தவறு என்றும் கூறி வந்தனர்.

பண்ட் காயத்தால்..

பண்ட் காயத்தால்..

இந்த நிலையில் தான் டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். அவருக்கு பதில் எந்த இந்திய வீரரை ஆட வைப்பது என்ற கேள்வி எழுந்தது. அப்போது டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அனுபவம் வாய்ந்த ரஹானேவை ஆட வைத்தார்.

2 ரன்

2 ரன்

தன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 15 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த ரஹானே, இரண்டாவது தன் பழைய அணியான ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் 9 பந்துகளில் 2 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

டெஸ்ட் பேட்டிங்

டெஸ்ட் பேட்டிங்

ரஹானே கடந்த சீசனிலும் நிதான ஆட்டம் ஆடி விமர்சனத்தை சந்தித்து இருந்தார். இந்த நிலையில், இந்த சீசனிலும் டெஸ்ட் போட்டி போல ஆடி டெல்லி அணி நிர்வாகத்தை வெறுப்பேற்றி இருக்கிறார். இனி அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சிக்கலில் டெல்லி அணி

சிக்கலில் டெல்லி அணி

அதே சமயம், ரிஷப் பண்ட் இன்னும் சில போட்டிகளுக்கு ஆட முடியாது என கூறப்படுவதால் சரியான மாற்று இந்திய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் இல்லாமல் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை ஆட வைத்துள்ளது டெல்லி.

டெல்லி ஸ்கோர்

டெல்லி ஸ்கோர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரஹானே சொதப்பினாலும், தவான் 33 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்து இருந்தது.

Story first published: Wednesday, October 14, 2020, 22:36 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+