For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி 3 பால்.. 3 சிக்ஸ் தேவை.. திக்திக் தருணம்.. போராடிய ராஜஸ்தான்.. வீழ்த்திய தவான்!

துபாய் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தவான் தன் பேட்டிங்கால் மட்டுமின்றி கேப்டன்சியாலும் சேர்த்து வீழ்த்தினார்.

டெல்லி கேபிடல்ஸ் அணி 30வது லீக் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 161 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 148 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டெல்லி - ராஜஸ்தான்

டெல்லி - ராஜஸ்தான்

2020 ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டியில் டெல்லி - ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியி; டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணி முதல் பந்திலேயே ப்ரித்வி ஷாவை இழந்தது. அவர் ஆர்ச்சர் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார்.

இரு அரைசதங்கள்

இரு அரைசதங்கள்

அடுத்து ரஹானே 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் தவான் - ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்து அணியை மீட்டனர். தவான் 57, ஸ்ரேயாஸ் 53 ரன்கள் குவித்தனர். கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடத் தவறியது டெல்லி அணி.

டெல்லி ஸ்கோர்

டெல்லி ஸ்கோர்

எனினும், 20 ஓவர்களில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு கடைசி ஓவர்களில் சிறப்பாக இருந்தது. ஆர்ச்சர் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

பட்லர் அதிரடி

பட்லர் அதிரடி

அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சேஸிங் செய்யத் துவங்கியது. பட்லர் அதிரடி துவக்கம் அளித்தார். அவர் 9 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். ஸ்மித் 1 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். சாம்சன் 18 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார்.

உத்தப்பா

உத்தப்பா

ஸ்டோக்ஸ் 41, ராபின் உத்தப்பா 32 ரன்கள் எடுத்தனர். உத்தப்பா இன்னும் சில பந்துகளை சந்தித்து ஆடி இருந்தால் நிச்சயம் அது டெல்லி அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கும். ஆனால், அவர் சென்ற உடன் ராஜஸ்தான் அணி சரிந்தது.

சிக்ஸர் மன்னன் ராகுல் திவேதியா

சிக்ஸர் மன்னன் ராகுல் திவேதியா

சிக்ஸர் மன்னன் ராகுல் திவேதியா களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் திவேதியா, கோபால் திணறினர். கடைசி மூன்று பந்துகளில் மூன்று சிக்ஸர் அடித்தால் வெல்லலாம் என்ற நிலை இருந்தது.

ஆனால், திவேதியாவால் சிக்ஸ் அடிக்க முடியவில்லை. கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இதை அடுத்து டெல்லி அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி மோசமான பேட்டிங் காரணமாக தோற்றது.

டெல்லி வெற்றி

டெல்லி வெற்றி

ஷிகர் தவான் பேட்டிங்கில் அதிரடி ஆட்டம் ஆடி மிரட்டியதுடன், ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்து வெளியேறியதால் தற்காலிகமாக கேப்டன்சி செய்தார். ராஜஸ்தான் அணியை சிக்கலில் ஆழ்த்தும் வகையில் பந்துவீச்சை அவர் மாற்றினார். 19வது ஓவரை ரபாடாவிடம் கொடுத்து விட்டு, 20வது ஓவரை உள்ளூர் வீரரிடம் அளித்தது என ஆக்ரோஷமான கேப்டன்சியை வெளிப்படுத்தினார் தவான்.

Story first published: Thursday, October 15, 2020, 0:25 [IST]
Other articles published on Oct 15, 2020
English summary
IPL 2020 DC vs RR : Delhi Capitals vs Rajasthan Royals 30th match result
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+