Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லி டாஸ் வெற்றி.. ராஜஸ்தான் ஜெயிச்சே ஆகணும்.. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதிரடி முடிவு..!

டெல்லி டாஸ் வெற்றி.. ராஜஸ்தான் ஜெயிச்சே ஆகணும்.. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதிரடி முடிவு..!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீசியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. டெல்லி அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டது.

டெல்லி - ராஜஸ்தான் போட்டி

டெல்லி - ராஜஸ்தான் போட்டி

2020 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய 30வது லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 6 புள்ளிகள் மட்டுமே பெற்று இருந்த ராஜஸ்தான் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

ராஜஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. கடந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் துவக்க வீரராக களமிறங்கினார். ஆனால், அந்த திட்டம் வேலை செய்யவில்லை. ஆனாலும், இந்தப் போட்டியிலும் பென் ஸ்டோக்ஸ்-ஐ துவக்க வீரராக ஆட வைக்க உள்ளதாக தெரிவித்தார் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.

டெல்லி அணி மாற்றம்

டெல்லி அணி மாற்றம்

டெல்லி அணியில் ஹர்ஷால் பட்டேல் நீக்கப்பட்டு அவருக்கு பதில் துஷார் தேஷ்பாண்டே அணியில் இடம் பெற்றார். இது அவரது அறிமுகப் போட்டி ஆகும். டெல்லி அணி இந்தப் போட்டியில் வென்றால் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பெறும்.

டெல்லி அணி

டெல்லி அணி

டெல்லி அணி விவரம் - ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், அஜின்க்யா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, அக்சர் பட்டேல், அஸ்வின், துஷார் தேஷ்பாண்டே, காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ஜே

ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் அணி விவரம் - பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, ரியான் பராக், ராகுல் திவேதியா, ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், ஜெயதேவ் உனட்கட், கார்த்திக் தியாகி

Story first published: Wednesday, October 14, 2020, 19:45 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+