Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரா இப்படி ஆடுறார்? நம்ப மறுத்த ரசிகர்கள்.. வெறியாட்டம் ஆடி.. டெல்லியை காப்பாற்றிய சீனியர் வீரர்

துபாய் : டெல்லி கேபிடல்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 161 ரன்கள் குவித்தது.

ரன் குவிக்க கடினமான ஆடுகளம் என்றாலும் டெல்லி அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் அதிரடி ஆட்டம் ஆடி அணியை மீட்டார்.

கடந்த சில போட்டிகளில் மந்தமாக ஆடி வந்த தவான், இந்தப் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

டெல்லி டாஸ் வெற்றி

டெல்லி டாஸ் வெற்றி

2020 ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. தவான் - ப்ரித்வி ஷா துவக்கம் அளித்தனர்.

ப்ரித்வி ஷா டக் அவுட்

ப்ரித்வி ஷா டக் அவுட்

ப்ரித்வி ஷா முதல் ஓவரின் முதல் பந்தில் டக் அவுட் ஆனார். ஜோப்ரா ஆர்ச்சரின் ஸ்விங் பந்துவீச்சில் மோசமாக ஆடி, இன்சைட் எட்ஜ் ஆகி அவர் பவுல்டு அவுட் ஆனார். அடுத்து ரஹானே களத்துக்கு வந்தார். அவர் பந்துகளை வீணடித்தார்.

தவான் அதிரடி

தவான் அதிரடி

மறுபுறம் ஷிகர் தவான் கடந்த போட்டிகளைப் போல அல்லாமல் அதிரடி ஆட்டம் ஆடினார். அவ்வப்போது பவுண்டரிகள் அடித்துக் கொண்டே இருந்தார். 33 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார் தவான். இதன் இடையே ரஹானே 9 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து இருந்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் நிதான ஆட்டம்

ஸ்ரேயாஸ் ஐயர் நிதான ஆட்டம்

அவருக்கு அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் நிதான ஆட்டம் ஆடினார். அவர் 43 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். அடுத்து ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி அதிரடி ஆட்டம் ஆடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் ரன் எடுக்க முடியாமல் திணறினர்.

டெல்லி ஸ்கோர்

டெல்லி ஸ்கோர்

ஸ்டோய்னிஸ் 19 பந்துகளில் 18 ரன்களும், அலெக்ஸ் கேரி 13 பந்துகளில் 14 ரன்களும் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். அக்சர் பட்டேல் 7 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி ௨௦ ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது.

ராஜஸ்தான் பந்துவீச்சு

ராஜஸ்தான் பந்துவீச்சு

கடைசி சில ஓவர்களில் டெல்லி அணி 170, 180 ரன்களை எடுக்க வாய்ப்பு இருந்தும் ராஜஸ்தான் அணியின் கட்டுக் கோப்பான பந்துவீச்சால் அந்த அணியால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை. ஆர்ச்சர் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

Story first published: Wednesday, October 14, 2020, 22:14 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+