Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேன் வில்லியம்சன் வேண்டும்.. அதற்காக இப்படியா? முக்கிய வீரரை நீக்கிய வார்னர்.. பொங்கிய ரசிகர்கள்!

அபுதாபி : டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியல் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டது.

இதுவரை நடந்த இரு போட்டிகளில் நியூசிலாந்தை சேர்ந்த நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் ஆடவில்லை.

அவரை அணியில் சேர்க்க மற்றொரு முக்கிய வீரரை நீக்கி உள்ளார் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர்.

ஹைதராபாத் தோல்வி

ஹைதராபாத் தோல்வி

2020 ஐபிஎல் தொடரில் தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் பாதாளத்தில் உள்ளது. அதில் இருந்து மீள வேண்டிய கட்டாயத்தில், அழுத்தத்தில் இருக்கிறார் கேப்டன் டேவிட் வார்னர்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

அவர் கடந்த போட்டியில் கூட அணியில் ஒரீரு மாற்றங்கள் செய்தார். எனினும், அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் வார்னர் இரண்டு மாற்றங்களை செய்துள்ளார்.

கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன்

ஆப்கானிஸ்தான் ஆல் - ரவுண்டர் முகமது நபிக்கு பதில் கேன் வில்லியம்சன் அணியில் சேர்க்கப்பட்டார். கடந்த போட்டியில் நபி சிறப்பாகவே செயல்பட்டு இருந்தார். எனினும், அவர் கேன் வில்லியம்சனுக்கு இடம் அளிக்க வேண்டி நீக்கப்பட்டார்.

விரிதிமான் சாஹா

விரிதிமான் சாஹா

கடந்த போட்டியில் ரன் குவிக்க முடியாமல் திணறிய விரிதிமான் சாஹா அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் அப்துல் சமத் என்ற காஷ்மீர் அணி வீரர் சேர்க்கப்பட்டார். அவர் மிகக் குறைந்த உள்ளூர் போட்டிகளிலேயே ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகமது நபி நீக்கம்

முகமது நபி நீக்கம்

முகமது நபி நீக்கம் தான் இதில் ரசிகர்களின் அதிருப்தியை பெற்றுள்ளது. கடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி இருந்தார் நபி. 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார். பேட்டிங்கில் 8 பந்துகளில் 11 ரன்கள் சேர்த்து இருந்தார்.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

ஆல் - ரவுண்டரான அவர் நீக்கப்பட்டது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கேன் வில்லியம்சன் ஆடுவது மகிழ்ச்சி என்றாலும், அதற்காக பார்மில் உள்ள நல்ல ஆல் - ரவுண்டரை நீக்க வேண்டுமா? என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Tuesday, September 29, 2020, 20:11 [IST]
Other articles published on Sep 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+