Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 விக்கெட் அள்ளிய நம்பர் 1 ஸ்பின்னர்.. சரிந்த டெல்லி.. பிரஷர் கொடுத்து ஜெயித்த ஹைதராபாத்!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரின் 11வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட்கள் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது.

டெல்லி கேபிடல்ஸ் அணியல் 163 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியவில்லை. உலகின் சிறந்த டி20 ஸ்பின்னரான ரஷித் கான் தன் பந்துவீச்சால் டெல்லி அணியை வீழ்த்தினார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இந்தப் போட்டிக்கு முன் டெல்லி அணி தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இருந்தது. ஹைதராபாத் அணி தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து இருந்தது. இரு எல்லைகளில் இருக்கும் அணிகள் மோதும் போட்டி என்பதால் இந்தப் போட்டிக்கு எதிர்பார்ப்பு எழுந்தது.

டாஸ் முடிவு ஏன்?

டாஸ் முடிவு ஏன்?

டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். பின்பாதியில் பனிப் பொழிவு இருக்கும் என்பதால் பந்துவீச்சைத் தேர்வு செய்ததாக அவர் கூறினார். அந்த அணியில் ஆவேஷ் கானுக்கு பதில், இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டார்.

கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன்

ஹைதராபாத் அணியில் முகமது நபிக்கு பதில் கேன் வில்லியம்சன் சேர்க்கப்பட்டார். விரிதிமான் சாஹாவுக்கு பதில் அப்துல் சமத் அணியில் சேர்க்கப்பட்டார். அந்த அணிக்கு வார்னர் - பேர்ஸ்டோ மீண்டும் சிறப்பான துவக்கம் அளித்தனர்.

நல்ல துவக்கம்

நல்ல துவக்கம்

வார்னர் - பேர்ஸ்டோ விக்கெட் இழக்காமல் 9.3 ஓவர்களை வரை ஆடி முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தனர். வார்னர் 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ நிதான ஆட்டம் ஆடி 48 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார்.

கேன் வில்லியம்சன் அதிரடி

கேன் வில்லியம்சன் அதிரடி

மனிஷ் பாண்டே 3 ரன்களில் ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் இந்த சீசனில் தன் முதல் போட்டியிலேயே அதிரடி ஆட்டம் ஆடி மிரட்டினார். 26 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார் வில்லியம்சன். அவர் ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

162 ரன்கள் குவிப்பு

162 ரன்கள் குவிப்பு

20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து இருந்தது. அப்துல் சமத் 12, அபிஷேக் சர்மா 1 ரன் எடுத்து களத்தில் இருந்தனர். டெல்லி அணியின் அமித் மிஸ்ரா, ரபாடா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

டெல்லி பேட்டிங்

டெல்லி பேட்டிங்

புவனேஸ்வர் குமார், ரஷித் கான் கட்டுக் கோப்பாக பந்து வீசிய நிலையில் டெல்லி பேட்ஸ்மேன்களால் சரியாக ரன் குவிக்க முடியவில்லை. ப்ரித்வி ஷா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். தவான் நிதான ஆட்டம் ஆடி 34 ரன்கள் எடுத்தார்.

ரஷித் கான்

ரஷித் கான்

ரிஷப் பண்ட் தன் இயல்பான ஆட்டம் ஆடாமல் நிறுத்தி நிதானமாக ஆடி 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தவான், ஸ்ரேயாஸ் ஐயர், பண்ட் என மூன்று முக்கிய விக்கெட்களை எடுத்தார் ரஷித் கான். அதன் பின் ஹெட்மயர் 21, ஸ்டோனிஸ் 11, அக்சர் பட்டேல் 5 ரன் வரிசையாக ஆட்டமிழந்தனர்,

தோல்வி

தோல்வி

ரன் ரேட் அழுத்தத்தால் டெல்லி அணி விக்கெட்களை இழந்து தோல்வி அடைந்தது. சரியாக திட்டமிட்ட ஹைதரபாத் அணிக்கு பந்துவீச்சாளர்கள் கை கொடுக்கவே அந்த அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்தது.

Story first published: Wednesday, September 30, 2020, 16:25 [IST]
Other articles published on Sep 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+