Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புது பேட்டிங் ஸ்டைல்.. ஒரு சிக்ஸ் கூட இல்லை.. எகிறிய ஸ்ட்ரைக் ரேட்.. அந்த வீரரால் பதறிய டெல்லி டீம்!

அபுதாபி : அதிரடி ஆட்டம் ஆடுவதில் புது ஸ்டைலை கொண்டு வந்துள்ளார் கேன் வில்லியம்சன்.

கடந்த ஐபிஎல் சீசன்களிலும் அவர் இதே போன்ற ஆட்டத்தை ஆடி இருந்தாலும், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இன்னும் துல்லியமாக ரன் சேர்த்து, ஒரு சிக்ஸ் கூட அடிக்காமல் மிரட்டினார்.

அவர் களத்தில் நின்ற போது கண்ணுக்கே தெரியாமல் வேகமாக ரன் சேர்த்தார்.

லீக் போட்டி

லீக் போட்டி

2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 11 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை சந்தித்தது. கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன்

முதல் இரண்டு போட்டிகளில் ஆடாத கேன் வில்லியம்சன் ஹைதராபாத் அணியில் சேர்க்கப்பட்டார். போட்டியில் அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. வார்னர் - பேர்ஸ்டோ துவக்கம் அளித்தனர். அவர்கள் இருவரும் 9.3 ஓவர் வரை விக்கெட் இழக்காமல் களத்தில் நின்று ஆடிய போதும் ரன் ரேட் எகிறவில்லை.

ரன் ரேட்

ரன் ரேட்

10 ஓவர்களில் அந்த அணி 8 என்ற ரன் ரேட்டில் தான் இருந்தது அதன் பின் வார்னர், மனிஷ் பாண்டே விக்கெட்கள் வீழ்ந்த உடன் துவக்க வீரர் பேர்ஸ்டோ இன்னும் தன் வேகத்தை குறைத்தார். அப்போது கேன் வில்லியம்சன் களமிறங்கினார்.

சிங்கிள் ரன்கள்

சிங்கிள் ரன்கள்

வில்லியம்சன் பவுண்டரி அடிக்க வேண்டும், சிக்ஸ் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு முதல் பந்து முதல் சிங்கிள் ரன்கள் எடுக்கத் துவங்கினார். ஒரு பந்தை கூட வீணடிக்காமல் அவர் சிங்கிள் ரன்கள் ஓடினார்.

இடையே 5 ஃபோர்

இடையே 5 ஃபோர்

இடையே கிடைத்த வாய்ப்பில் 5 ஃபோர் அடித்தார். சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் அவர் இறங்கவில்லை. 26 பந்துகளை சந்தித்த அவர் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 157 ஆகும். அவர் வெறும் சிங்கிள் ரன்கள் எடுத்தது போன்றே இருந்த நிலையில், ஸ்ட்ரைக் ரேட் மட்டும் எகிறியது.

ஒரு டாட் பால்

ஒரு டாட் பால்

அவர் சந்தித்த 26 பந்துகளில் ஒரு பந்து மட்டுமே டாட் பால் ஆடினார். 5 ஃபோர் அடித்தார். மீதமுள்ள 20 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். அவரை ஆட்டமிழக்கச் செய்ய முடியாமல் திணறிய டெல்லி அணி கடைசி ஓவரின் 4வது பந்தில் தான் அவர் விக்கெட்டை வீழ்த்தியது.

இலக்கு

இலக்கு

இந்தப் போட்டியில் வார்னர் 45, பேர்ஸ்டோ 53, கேன் வில்லியம்சன் 41 ரன்கள் எடுத்தனர். ஹைதரபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. டெல்லி அணிக்கு இது சவாலான இலக்கா? என்ற கேள்வியும் எழுந்தது.

ஏன் இப்படி ஆடினார்?

ஏன் இப்படி ஆடினார்?

எனினும், ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமானதாக இருந்த நிலையில் ஹைதரபாத் அணி இந்த ஸ்கோரை எடுத்ததாக விமர்சகர்கள் கூறினர். ஆடுகளத்தை சரியாக கணித்த கேன் வில்லியம்சன் பவுண்டரி அடிக்க முற்படாமல் சிங்கிள் ரன்கள் எடுக்க முடிவு செய்து வேகமாக ரன் குவித்தார்.

Story first published: Wednesday, September 30, 2020, 16:26 [IST]
Other articles published on Sep 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+