Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருப்பா அது? 19 வயது காஷ்மீர் வீரரை ஆட வைத்த வார்னர்.. விவிஎஸ் லக்ஷ்மனின் ரகசிய திட்டம்!

அபுதாபி : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் 19 வயது உள்ளூர் வீரர் ஒருவரை ஆட வைத்து ஆச்சரியம் அளித்தார் டேவிட் வார்னர்.

அந்த வீரர் காஷ்மீரை சேர்ந்தவர். இதுவரை மிகக் குறைந்த போட்டிகளிலேயே ஆடி உள்ளார்.

ஆனாலும், அவரை ஆட வைத்தார் டேவிட் வார்னர். இதன் பின்னணியில் விவிஎஸ் லக்ஷ்மன் எதிர்கால ரகசிய திட்டம் ஒன்றை வைத்துள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் போட்டி

டெல்லி கேபிடல்ஸ் போட்டி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2020 ஐபிஎல் தொடரில் தன் மூன்றாவது லீக் போட்டியில்டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. அதற்கு முன் நடந்த இரு போட்டிகளில் தோல்வி அடைந்த ஹைதராபாத் அணி அதிரடியாக இளம் வீரர் ஒருவரை களமிறக்கியது.

அப்துல் சமத்

அப்துல் சமத்

அவர் தான் அப்துல் சமத். 19 வயதே ஆன அப்துல் சமத், ரஞ்சி ட்ராபி போட்டிகளிலும், காஷ்மீர் மாநிலத்திற்காக டி20 போட்டிகளிலும் ஆடி உள்ளார். வெறும் 11 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ள அவருக்கு அணியில் இடம் அளித்தார் வார்னர்.

மூன்றாவது காஷ்மீர் வீரர்?

மூன்றாவது காஷ்மீர் வீரர்?

ஐபிஎல் தொடரில் ஆடும் மூன்றாவது காஷ்மீர் வீரர் ஆவார் சமத். இதற்கு முன் பர்வேஸ் ரசூல் புனே வாரியர்ஸ், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிக்கு ஆடி உள்ளார். ரஷீக் சைலம் மும்பை அணிக்கு ஆடி உள்ளார். அவர்களை அடுத்து அப்துல் சமத் மூன்றாவதாக ஐபிஎல் தொடரில் பங்கேற்று ஹைதராபாத் அணியில் ஆடினார்.

லக்ஷ்மன் திட்டம்

லக்ஷ்மன் திட்டம்

விவிஎஸ் லக்ஷ்மன் கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்துக்கு முன் ஹைதரபாத் அணியில் அதிரடி பினிஷர்கள் இல்லை என்ற குறையைப் போக்க இளம் வீரர்களை தேடி வந்துள்ளார். அப்போது அப்துல் சமத் பற்றி தெரிந்து கொண்டார். அவரைப் பற்றி காஷ்மீர் அணி பயிற்சியாளரிடம் விசாரித்து தெரிந்து கொண்டுள்ளார்.

ஏலத்தில் வாங்கினார்

ஏலத்தில் வாங்கினார்

இர்பான் பதான் காஷ்மீர் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்த நிலையில் அவரிடமும் விசாரித்துள்ளார் லக்ஷ்மன், அப்துல் சமத் 11 டி20 போட்டிகளில் பேட்டிங் சராசரி 40 வைத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 136. ரஞ்சி ட்ராபியில் கடந்த சீசனில் 36 சிக்ஸ்கள் அடித்து 592 ரன்கள் குவித்து இருந்தார். அதை அடுத்து அவரை ஏலத்தில் வாங்கினார் லக்ஷ்மன்.

அப்துல் சமத் ஆட்டம்

அப்துல் சமத் ஆட்டம்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அப்துல் சமத் கடைசி நேரத்தில் இறங்கி 7 பந்துகளில் 12 ரன்கள் சேர்த்தார். 1 சிக்ஸ், 1 ஃபோர் அடித்தார் அவர். விவிஎஸ் லக்ஷ்மனின் திட்டம் ஒரு வகையில் நிறைவேறி உள்ளது.

ஸ்ட்ரைக் ரேட்

ஸ்ட்ரைக் ரேட்

இந்தப் போட்டியில் ஹைதரபாத் அணியின் வார்னர், பேர்ஸ்டோ, வில்லியம்சன் என சர்வதேச அனுபவம் கொண்டவர்களே கையில் விக்கெட் இருந்த போதும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் தான் ஆடினர். ஆனால்,பினிஷர் என்ற அடையாளத்துடன் இறங்கிய அப்துல் சமத் தன் பணியை சிறப்பாக செய்து 171 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்தார்.

Story first published: Wednesday, September 30, 2020, 16:26 [IST]
Other articles published on Sep 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+