Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லி கேபிடல்ஸ் மோதும் 14 ஐபிஎல் போட்டிகள் லிஸ்ட்.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல்!

துபாய் : டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த சீசனில் ஐபிஎல் கோப்பை வென்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் 2020 ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளது.

2020 ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ தாமதமாக செப்டம்பர் 6 அன்று வெளியிட்டது.

டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி கேபிடல்ஸ் அணி இதுவரை ஐபிஎல் கோப்பை வென்றதில்லை. 2019 ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் வரை முன்னேறி தோற்றது. அதுவே அந்த அணிக்கு பெரிய முன்னேற்றமாக இருந்தது. இந்த ஆண்டு ஒரு படி முன்னேறி ஐபிஎல் கோப்பை வெல்ல அந்த அணி முழு மூச்சில் களமிறங்கி உள்ளது.

இளம் கேப்டன்

இளம் கேப்டன்

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இளம் கேப்டன் ஆவார். மற்ற அணிகள் சர்வதேச அனுபவம் கொண்டவர்களை கேப்டன்களாக நியமித்துள்ள நிலையில் டெல்லி அணி குறைந்த சர்வதேச அனுபவம் கொண்ட இளம் கேப்டனை வைத்து முன்னேற்றம் கண்டு வருகிறது.

அஸ்வின், ரஹானே

அஸ்வின், ரஹானே

இந்த சீசனில் அஸ்வின் மற்றும் அஜின்க்யா ரஹானே டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்துள்ளனர். இதன் மூலம் அந்த அணியின் அனுபவ வீரர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இது அந்த அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் போட்டி அட்டவணை

டெல்லி கேபிடல்ஸ் போட்டி அட்டவணை

டெல்லி கேபிடல்ஸ் அணி பங்கேற்க உள்ள 14 லீக் சுற்றுப் போட்டிகள், நடக்கும் இடம், நேரம் மற்றும் தேதி ஆகியவற்றை இங்கே காணலாம்.

  • செப்டம்பர் 20, டெல்லி கேபிடல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், துபாய், இரவு 7:30 மணி
  • செப்டம்பர் 25, சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், துபாய், இரவு 7:30 மணி
  • செப்டம்பர் 29, டெல்லி கேபிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், அபுதாபி, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 3, டெல்லி கேபிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஷார்ஜா, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 5, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேபிடல்ஸ், துபாய், இரவு 7:30 மணி
  • அக்டோபர் 9, ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், ஷார்ஜா, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 11, மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், அபுதாபி, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 14, டெல்லி கேபிடல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், துபாய், இரவு 7:30 மணி
  • அக்டோபர் 17, டெல்லி கேபிடல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், ஷார்ஜா, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 20, கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs டெல்லி கேபிடல்ஸ், துபாய், இரவு 7:30 மணி
  • அக்டோபர் 24, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், அபுதாபி, மாலை 3:30 மணி
  • அக்டோபர் 27, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேபிடல்ஸ், துபாய், இரவு 7:30 மணி
  • அக்டோபர் 31, டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், துபாய், மாலை 3:30 மணி
  • நவம்பர் 2, டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், அபுதாபி, இரவு 7:30 மணி
Story first published: Sunday, September 6, 2020, 20:19 [IST]
Other articles published on Sep 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+