Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் பட்டியல்.. ஆர்சிபியை பின்னுக்கு தள்ளி டெல்லி கேபிடல்ஸ் முதலிடம்

துபாய் : நேற்றைய ஐபிஎல்லின் 19வது போட்டியில் ஆர்சிபியை 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி கொண்டுள்ளது.

இதையடுத்து ஐபிஎல் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளை இந்த அணி பெற்றுள்ளது.

இதனிடையே இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி காகிசோ ரபடா பர்ப்பிள் கேப்பை பெற்றுள்ளார்.

ஆர்சிபி தோல்வி

ஆர்சிபி தோல்வி

ஐபிஎல்லின் 19வது போட்டி நேற்று ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 197 ரன்களை இலக்காக கொடுத்த நிலையில் ஆர்சிபி அந்த ரன்னை சேஸ் செய்ய முடியாமல் 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அபாரம்

டெல்லி கேபிடல்ஸ் அபாரம்

இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி தான் விளையாடியுள்ள 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளை பெற்றுள்ளது. ஐபிஎல் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. இந்த போட்டியில் தோல்வி அடைந்துள்ள ஆர்சிபி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

12 விக்கெட்டுகள்

12 விக்கெட்டுகள்

இந்நிலையில், இந்த போட்டியில் விராட் கோலியின் விக்கெட் உள்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி காகிசோ ரபடா 12 விக்கெட்டுகளை மொத்தமாக பெற்றுள்ளார். இதன்மூலம் பர்ப்பிள் கேப்பை அவர் பெற்றுள்ளார். இவர் சஹலை விட 4 விக்கெட்டுகள் முன்னிலையில் உள்ளார்.

முதலிடத்தில் கே.எல். ராகுல்

முதலிடத்தில் கே.எல். ராகுல்

இந்த வரிசையில் டிரெண்ட் போல்ட் மற்றும் முகமது ஷமி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதேபோல ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் பிரித்வி ஷா 42 ரன்களை அடித்து 5வது இடத்தில் உள்ளார். இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் 302 ரன்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். இவரை சிஎஸ்கே வீரர் பாப் டூ பிளசிஸ் 282 ரன்களுடன் 2வது இடத்தில் தொடர்கிறார்.

Story first published: Tuesday, October 6, 2020, 10:53 [IST]
Other articles published on Oct 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+