For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திருடிவிட்டாய்.. ஆமா ஒத்துக்குறேன்.. ஐபிஎல்-லுக்கு போகும் முன் வருங்கால மனைவியுடன் ஒரே ரொமான்ஸ்!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் 2020 ஐபிஎல் தொடரில் ஆட உள்ளார்.

Recommended Video

IPL 2020: Dream11 clarifies they are 'Indian Brand' | OneIndia Tamil

அதற்காக துபாய் கிளம்பிச் சென்றுள்ளார். அதற்கு முன் தன் வருங்கால மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் ரொமான்ஸ் செய்துள்ளார்.

ஐபிஎல்-இல் சாஹல்

ஐபிஎல்-இல் சாஹல்

2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.அனைத்து ஐபிஎல் அணிகளும் அந்த தொடரில் பங்கேற்க தனி விமானத்தில் தங்கள் அணி வீரர்களை திரட்டிக் கொண்டு சென்றுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ள சாஹலும் சென்றுள்ளார்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

சாஹலுக்கு கடந்த சில நாட்கள் முன்பு தான் நிச்சயதார்த்தம் நடந்தது. டிக்டாக்கில் டான்ஸ் ஆடுவது, காமெடி செய்வது என கிரிக்கெட் இல்லாத நேரங்களிலும் "கலை"யில் பிஸியாக இருந்த சாஹல் நடனக் கலையில் புகழ் பெற்றுள்ள ஒருவரை தான் மனைவியாக தேர்வு செய்துள்ளார்.

யார் இந்த தனஸ்ரீ வர்மா?

யார் இந்த தனஸ்ரீ வர்மா?

மும்பையில் புகழ் பெற்ற நடனக் கலைஞராக இருக்கும் தனஸ்ரீ வர்மாவை தான் அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். நடனம் தொடர்பான சேவைகளை வழங்க நிறுவனம் ஒன்றையும் வைத்துள்ளார் தனஸ்ரீ வர்மா. யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

15 லட்சம் பேர்

15 லட்சம் பேர்

15 லட்சம் பேர் ஏற்கனவே அவரது யூட்யூப் சேனலை பின் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சாஹல் அவரிடம் சில நாள் நடனம் கற்றுக் கொண்ட சம்பவமும் நடந்துள்ளது. இந்த நிலையில், இரு வீட்டாரும் பேசி இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்தனர்.

டிரென்ட் ஆனார்

டிரென்ட் ஆனார்

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தனஸ்ரீ வர்மா பற்றி அறிந்த பலரும் அவரைப் பற்றி தேடியதால் கூகுளில் கூட அவர் டிரென்ட் ஆனார். அவர் பல் மருத்துவர் என்பதை அறிந்த பலர் மேலும் வியப்படைந்தனர்.

செல்பி

செல்பி

2020 ஐபிஎல் தொடர் வருவதால் தன் வருங்கால மனைவியை விட்டு பிரிய வேண்டிய நேரம் வந்தது. சாஹல், தனஸ்ரீ வர்மாவுடன் எடுத்துக் கொண்ட செல்பி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். அதன் கீழே அவர் எழுதி உள்ள வாசகத்தில் தான் ரொமான்ஸ் செய்திருந்தார்.

திருடி விட்டாய்

திருடி விட்டாய்

அந்த புகைப்படத்தின் கீழ், "என் இதயத்தில் இருந்து ஒரு பீட்சாவை நீ திருடி விட்டாய்" என கவிதையாய் பொங்கி இருந்தார் சாஹல். அதற்கு உடனே பதில் அளித்துள்ள தனஸ்ரீ வர்மா "நான் ஒப்புக் கொள்கிறேன்" என சரண்டர் ஆகி உள்ளார்.

கப் முக்கியம்

கப் முக்கியம்

இவர்களின் இந்த குட்டி ரொமான்ஸ் உரையாடலை ரசிகர்கள் லைக் செய்து குவித்துள்ளனர். சில ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரசிகர்கள் மட்டும் "ரொமான்ஸ் எல்லாம் இருக்கட்டும், எங்களுக்கு கப் முக்கியம்" என அவரை உஷார் செய்துள்ளனர்.

சாஹல் கை கொடுத்தால்..

சாஹல் கை கொடுத்தால்..

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஐபிஎல் கோப்பை வென்றதில்லை. இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான நிலை இருக்கும் என்பதால் சாஹல் கை கொடுத்தால் அந்த அணி கோப்பை வெல்லவும் வாய்ப்பு உள்ளது.

Story first published: Saturday, August 22, 2020, 19:32 [IST]
Other articles published on Aug 22, 2020
English summary
IPL 2020 : Dhahanshree Verma agreed that she has stoeln Yuzvendra Chahal’s heart. As Chahal departed for IPL 2020, he is missing his fiance Dhahanshree Verma.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+