Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னங்க இதெல்லாம்.. நம்பவே முடியலை.. தப்பு மேல் தப்பு செய்யும் தோனி.. துல்லியமாக கண்டுபிடித்த கோலி!

துபாய் : விராட் கோலி கடந்த காலங்களில் டிஆர்எஸ் ரிவ்யூ கேட்பதில் ஏராளமான சொதப்பலை செய்துள்ளார்.

ஆனால், தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் அவரது ரிவ்யூ கேட்கும் முறை தெளிவாக, துல்லியமாக உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் நடந்த சம்பவம் அதை நிரூபித்தது.

அதே சமயம், டிஆர்எஸ் என்பதே தோனி ரிவ்யூ சிஸ்டம் என கூறப்படும் அளவுக்கு துல்லியமாக டிஆர்எஸ்-ஐ கணித்து வந்த தோனி தொடர்ந்து தவறான ரிவ்யூ கேட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்.

நம்ப முடியாத மாற்றங்கள்

நம்ப முடியாத மாற்றங்கள்

2020 ஐபிஎல் தொடர் சில நம்ப முடியாத மாற்றங்களை தன் உடன் கொண்டு வந்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த இரண்டு சீசன்களை விட நல்ல சம பலம் கொண்ட அணியாக உள்ளது. முதல் போட்டியை வெற்றியுடன் துவக்கி உள்ளது.

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

மறுபுறம் மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்படும் ஐபிஎல் தொடரின் நாயகன் சுரேஷ் ரெய்னா இல்லாமல் சிஎஸ்கே அணி இந்த சீசனை ஆடி வருகிறது. சிஎஸ்கே அணி ஒரு போட்டியில் அட்டகாசமாக வென்று, மற்றொரு போட்டியில் மோசமான திட்டத்தால் தோல்வி அடைந்தது.

தோனி அளித்த அதிர்ச்சி

தோனி அளித்த அதிர்ச்சி

தோனி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சௌரப் திவாரிக்கு அம்பயர் எல்பிடபுள்யூ அவுட் தர மறுத்த போது, ரிவ்யூ கேட்டார். ஆனால், ரீப்ளேவில் அவுட் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. தோனி தவறாக ரிவ்யூ கேட்டதை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்தனர்.

ஸ்டீவ் ஸ்மித் அவுட் தான்

ஸ்டீவ் ஸ்மித் அவுட் தான்

அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் காலில் ஜடேஜா வீசிய பந்து பட்டது. ஜடேஜா அவுட் கேட்டார். அம்பயர் மறுத்து விட்டார். அப்போது ஜடேஜா அது அவுட் தான் என தோனியிடம் மிகவும் அழுத்திக் கூறினார்.

மீண்டும் தவறு

மீண்டும் தவறு

ஆனால், தோனி அவுட் இல்லை, பந்து ஸ்டம்ப்பை விட்டு நகர்ந்து சென்றது எனக் கூறி ரிவ்யூ கேட்க மறுத்து விட்டார். ஆனால், ரீப்ளேவில் அது அவுட் தான் என்பது தெளிவாக தெரிந்தது. 31 ரன்களில் அவுட் ஆக வேண்டிய ஸ்மித் 69 ரன்கள் குவித்தார்.

கோலி ஆச்சரியம்

கோலி ஆச்சரியம்

இப்படி தோனி இரண்டு போட்டிகளிலும் டிஆர்எஸ்-இல் சொதப்பி அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், விராட் கோலி பெரும் ஆச்சரியம் அளித்துள்ளார். இதுவரை கோலி ரிவ்யூ கேட்டால் பெரும்பாலும் தவறாகவே இருக்கும், ரிவ்யூ கேட்கத் தெரியாத கேப்டன் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டு வந்தார்.

ரிவ்யூ கேட்கவில்லை

ரிவ்யூ கேட்கவில்லை

ஆனால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சாஹல் வீசிய 9வது ஓவரின் இரண்டாவது பந்து நிக்கோலஸ் பூரன் காலில் பட்டது. அம்பயர் அவுட் தர மறுத்தார். அப்போது கோலி ரிவ்யூ கேட்கவில்லை. அது அவுட்டாக இருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

ஆனால், அதன் பின் ரீப்ளே காட்டப்பட்ட போது பந்து, பேட்டில் படுவது தெரிந்தது. எனவே, அது எல்பிடபுள்யூ அவுட் இல்லை. இதை சரியாக கணித்து கோலி ரிவ்யூ கேட்காமல் இருந்தார். கோலி ரிவ்யூவில் முன்னேறி வருவதை ரசிகர்கள் பாராட்டி உள்ளனர்.

Story first published: Thursday, September 24, 2020, 22:12 [IST]
Other articles published on Sep 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+