Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் கடைசி அஸ்திரம்.. சிஎஸ்கேவின் தலைஎழுத்தை மாற்றப் போகும் அந்த முடிவு.. பரபர திட்டம்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்விகளால் துவண்டு போயுள்ளது.

Recommended Video

CSK நிலைமை இனி தான் மோசமாகும் - கருத்து

இரண்டு வெற்றிகள் பெற்று இருந்தாலும், பிளே-ஆஃப் செல்ல வழி இருந்தாலும், சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் ஆடுவதுதான் அந்த அணியின் பெரிய சிக்கல்.

சிஎஸ்கே ஆடிய ஏழு போட்டிகளிலும் சேஸிங் செய்து அதில் ஐந்து முறை மோசமாக தோல்வி அடைந்தது.

கடைசி ஆயுதத்தை எடுத்த தோனி

கடைசி ஆயுதத்தை எடுத்த தோனி

சிஎஸ்கே வீரர்கள் பேட்டிங் செய்யும் முறையை மாற்றிக் கொள்ளாவிட்டால் மனதளவில் அந்த அணி சோர்ந்து விடும். இந்த நிலையில், கேப்டன் தோனி கடைசி ஆயுதத்தை எடுத்துள்ளார். இதிலும் சிஎஸ்கே வெற்றி பெறாவிட்டால் அந்த அணி இந்த சீசனை மறந்து விட வேண்டியது தான்.

பிளே-ஆஃப் வாய்ப்பு

பிளே-ஆஃப் வாய்ப்பு

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ஏழு போட்டிகளில் இரண்டு வெற்றிகள், ஐந்து தோல்விகள் அடைந்துள்ளது. பிளே-ஆஃப் செல்ல மீதமுள்ள ஏழு போட்டிகளில் குறைந்தது இன்னும் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

அதற்கு முதலில் சேஸிங் செய்யும் போது தேவைப்படும் ரன் ரேட்டை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அந்த கவலையே இன்றி பந்துகளை வீணடித்து நிதான ஆட்டம் ஆடுவதே தோல்விகளுக்கு காரணம்.

தோனி சேஸிங் பாணி

தோனி சேஸிங் பாணி

இது கேப்டன் தோனி தனிப்பட்ட முறையில் சேஸிங் செய்யும் பாணி. ஆனால், அவருக்கு வயதான நிலையில் அவரால் கூட இந்த முறையில் வெற்றிகரமாக சேஸிங் செய்ய முடிவதில்லை. இந்த நிலையில், மற்ற பேட்ஸ்மேன்களாலும் கூட இந்த முறையை கையாள முடியவில்லை.

பந்துவீச்சு மாற்றம்

பந்துவீச்சு மாற்றம்

அது தான் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணம். முதல் மூன்று போட்டிகளில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு மோசமாக இருந்தது. அணியை மாற்ற அடுத்த போட்டிகளில் பந்துவீச்சை பலமானதாக மாற்றினார் தோனி. பேட்டிங்கிலும் சிஎஸ்கே அணி நல்ல வீரர்களை கொண்டுள்ளது.

ஜாதவ் நீக்கம்

ஜாதவ் நீக்கம்

ஜாதவ் மட்டுமே பார்ம் அவுட்டில் இருந்தார். அவரை நீக்கிய நிலையில், சிஎஸ்கே அணியின் பேட்டிங் நல்ல நிலையில் உள்ளது. ஆனால், சேஸிங் செய்யும் போது சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

அதிக டாட் பால் ஆடக் கூடாது. இதுதான் கேப்டன் தோனியின் கடைசி ஆயுதம். அணியை மாற்றாமல் அடுத்த போட்டியில் தோனி பேட்ஸ்மேன்களை அதிரடி ஆட்டம் ஆட வைக்க திட்டமிட்டுள்ளார். அந்த திட்டம் தான் சிஎஸ்கே அணியின் தலைஎழுத்தை தீர்மானிக்க உள்ளது.

அடுத்த போட்டி

அடுத்த போட்டி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி அடுத்த போட்டியில் மோத உள்ளது. ஏற்கனவே, அந்த அணிக்கு எதிராக ஆடிய போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து இருந்தது. அதை மாற்றி இந்த முறை வெல்ல வேண்டும்.

பிளே-ஆஃப்

பிளே-ஆஃப்

அடுத்த போட்டியில் பெறும் வெற்றி 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பை தக்க வைக்கும். ஒருவேளை பேட்டிங் அணுகுமுறையை மாற்றியும் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தால் 2020 ஐபிஎல் தொடர் வாய்ப்பை இழப்பதுடன், தோனி தன் கடைசி ஐபிஎல் தொடரில் மோசமான செயல்பாடுடன் விடை பெற வேண்டிய நிலையும் ஏற்படும்.

Story first published: Monday, October 12, 2020, 20:37 [IST]
Other articles published on Oct 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+